பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திருவாசகம் - சில சிந்தனைகள் - பத்து மாதங்கள் முடிந்து முழுவடிவுடன் வெளிவரும் நிலைவரை படும் துன்பங்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. - 13ஆம் 14ஆம் அடிகளில் கிருமிகள் போரில் இக்கரு பிழைக்க வேண்டும் என்று பேசப்பெற்றுள்ளது. கிருமிச் செரு’ என்று அடிகளார் கூறியது, ஆணிடமிருந்து வெளிப்படும் விந்துவில் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள்(Sperm) இருப்பினும் அவற்றில் ஒன்றே ஒன்றுமட்டும் ஏனைய அணுக்களை முந்திக்கொண்டு பெண்ணின் கருமுட்டையிடம் சென்று சேர்தலைக் குறிப்பதாகும். . அடுத்துவரும் மூன்று அடிகள், அந்தப் பழைய காலத்திலேயே இத்தமிழர்கள் கருவின் வடிவை அறிந்து இருந்தனர் என்பதை அறிவிக்கும். முதல் மாத இறுதியில் பெண் முட்டையும் உயிரணுவும் சேர்ந்து தலைப்பகுதி பருத்து வால் பகுதி நீண்டிருக்கும் நிலையை விளக்கக் காம்புடன்கூடிய தான்றிக்காயை (மணத்தக்காளிக்காய் போன்றது அடிகளார் உவமை ஆக்குகின்றார். இரண்டாம் மாத முடிவில் பெருவளர்ச்சி அடையாமல் கருமுட்டை தான்றிக்காய் அளவே இருப்பின் அது வெளிப்பட்டுவிட வாய்ப்புண்டு. மூன்றாம் மாதத்தில் பெரும்பான்மையான பெண்கள் மயற்கை(மசக்கையால் வருந்துவர். ஆதலின், கண்டதை எல்லாம் தின்னவேண்டும் என்னும் பெரு விருப்பால் மண், சாம்பல் முதலியவற்றையும் தின்பர். இந்த மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்படுவது மிகவும் அதிகமாகையால் இவற்றை உள்ளடக்கி இம்மூன்றாம் மாதத்தையும் தாண்டி அக்கரு வளர்வதை இவ்வடிகளிற் குறிப்பிட்டுள்ளார். * : * - கருத்தோன்றி ஏழாம் மாதம் வரையில் முழுவளர்ச்சி அடையாமல் அரைகுறையாக வெளிப்பட வாய்ப்பு அதிகம் உண்டு. இவற்றை எல்லாம் மனத்திற்கொண்டே