பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 237 நம்முன்னோர் ஏழாம் மாதத்தில் வள்ைகாப்பு, சீமந்தம் முதலிய விழாக்களைக் கொண்டாடினர். அடுத்து, பத்தாம் மாதத்தில் குழந்தை பிறக்கின்ற பொழுது தாயும், குழந்தையும் படுகின்ற துன்பத்தைத் துக்க சாகரம் என்று அடிகளார் பேசுகின்றார். இருவரும் துயர் அடைகின்றனர். பத்து மாதங்களில் வருகின்ற துன்பங்களில் எல்லாம் தப்பிப்பிழைத்து இறுதியாகக் குழந்தை பிறக்கின்றது என்று எட்டாம் நூற்றாண்டில் அடிகளார் கூறியது விஞ்ஞானம் மிகுந்த இக்காலத்திற்கும் பொருந்துவதாகும். தசமதி' என்று அடிகளார் கூறியது அறிய வேண்டிய ஒன்றாகும். மதி என்பது முழுமதியைக் குறிக்கும். தசமதி என்பது பத்து முழுமதிகளைக் குறிக்கும். இவ்வாறு கூறுவதால் இருபத்தேழு நாட்கள் கூடிய சாந்திர மானத்தைக் குறிப்பிடுகிறார் என்பதும், 270 நாட்களே கரு தங்கியிருக்கும் காலம் என்பதும் அறியப் படுவதாகும். இன்றைய மருத்துவ நூலாரும் இதனை ஏற்றுக்கொள்வர். ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகல் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் (26–29) ஆண்டுகள் தோறும் என்றாரேனும் முதலாண்டில் குழந்தைக்குப் பாலூட்டல், நீராட்டல், தூக்குதல், படுக்கவைத்தல் முதலிய பல செயல்களைச் செய்யும்போது ஏற்படுகின்ற ஆபத்துகளை ஈண்டியும், இருத்தியும் என்றார். குழந்தையைத் தூக்கும்பொழுதும், பாலூட்டும்பொழுதும் கவனக்குறைவால் குழந்தைக்கு முறையே உரம்விழுதல், பால்விக்குதல் ஆகிய ஆபத்துகள் ஏற்படும் ஆதலால் அவற்றிற்குத் தப்பிப் பிழைத்தும் என்றார்.