பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருவாசகம் - சில சிந்தனைகள் காலையில் ஏற்படும் மலச்சிக்கல், பசியால் வரும் துன்பம், உறக்கமின்மையால் வரும் துன்பம் ஆகியவற்றில் இருந்து பிழைத்தும் என்க. . இற்றைநாளிற்கூட ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பேருந்து, புகைவண்டி, விமானம் ஆகிய எதன் மூலம் சென்றாலும் போய்த் திரும்புகின்றவரையில் எவ்வித உறுதியும் இல்லை. இதனை மனத்துட்கொண்டே அடிகளார் யாத்திரை பிழைத்தும் என்றார் என்க. கருங்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக் கச்சுஅறநிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து எய்த்து இடை வருந்த எழுந்து புடைபரந்து ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் (30–35) அழகிய பெண்களின் கூர்மையான பார்வையிலிருந்து தப்பித்தும் என்க. பித்த உலகர் பெரும்துறைப் பரப்பினுள் மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் - செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் (36-41) உலகிலுள்ள பல்வேறு துறைகளிலும் குறிக்கோள் இல்லாமல் நுழையவேண்டுமென்று பிடித்து உந்தும் ஆசையிலின்று பிழைத்தும் பல பகுதிகளாக விரிந்து நிற்கின்ற கல்வி என்னும் கடலினின்று தப்பியும் செல்வம் என்ற பெயருடைய பெருந்துன்பத்தினின்றும் பிழைத்தும்; தரித்திரம் என்று சொல்லப்படும் கொடிய விடத்திலிருந்து தப்பித்தும்; மிகவும் கீழ்த்தரமான பல்வேறு தொழில்