பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 239 களைச் செய்தேனும் பொருளிட்ட வேண்டும் ಹೌp ஆசைகளிலிருந்து பிழைத்தும் என்க. 36, 37ஆம் அடிகள் ஒரு சிறந்த உருவகத்தைத் தாங்கி நிற்கின்றன. குளத்தினின் உட்புகுந்த யானை குளத்தையே குழப்பி மேலும் என்ன செய்யவேண்டும் என்ற கருத்து இல்லாமல் ஆட்டம்போடுவதுபோல உலக வாழ்க்கையில் உள்ள பல்வேறு துறைகளில் எதனுTடு சென்று என்ன செய்யவேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமல் ஒவ்வொன்றிலும் மூக்கை நுழைத்து அல்லற்படும் மனிதன், களிறாக உருவகிக்கப்படுகின்றான். இங்குப் பல்வேறு துறைகள் என்று குறிப்பிடப்பெற்றது அவரவர் சக்திக்கும் அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற பல துறைகள் என்க. தனக்கு ஏற்ற துறை எது என்று அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சாக அதன்வழிச் செல்லுதலே அறிவுடைமை ஆகும். ஒவ்வொரு வழியிலும் ஒரு சிறப்பு இருத்தலின், தனக்குரியதைத் தேர்ந்துகொள்ள முடியாமல் எல்லாவற்றிலும் நுழைந்து கொள்ள முயல்வதையே நீர்ப்பரப்பைக் கலக்கும் யானை என உருவகித்துள்ளார் அடிகளார். - х 'மத்தக் களிறு எனும் அவா என்று கூறியுள்ளமையின் இதுபற்றி மற்றொரு கருத்தையும் சிந்திக்கலாம். அவா என்பதற்குப் பொருள்களைப் பெறவேண்டும் என்னும் ஆசைமட்டும் பொருளன்று. இந்த அவா. ஆணவத்தைத் தூண்டுதலின், அறிவுக் கூர்மையால் பிறரை வென்று கொடிதாட்ட வேண்டும் என்ற ஆசையும் இதன்பால் அடங்கும். சாதாரண மக்கள்ை வெற்றிகொண்டபின், தன் துறையில் உள்ளவர்களைமட்டுமன்றி, வேறு துறைகளில் மேலோங்கி நிற்பவர்களையும் அழித்தாவது வெற்றி கொள்ளவேண்டும் என்ற வெறி தோன்றுகிறது. இந்த ஆசையின் பயன், எவ்வாறாயினும் வெற்றிகொள்ள வேண்டும் என்ற நாட்டத்தில் முன்னேறிச் செல்லுமே