பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 241 அன்றியும் கடல் என்று கூறியதற்கு மற்றுமோர் பொருளுமுண்டு. கடலில் நீர் நிறைந்திருப்பினும் அதனை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. அது ஆவியாகச் சென்று மழையாகப் பொழியும்பொழுதுதான் நாம் அதனைப் பயன்படுத்த முடியும். அதேபோல, கல்வி நேரடியாக இறையன்பை வளர்ப்பதில்லை. கடல் நீர் ஆவியாதல்போலக் கல்வியில் பண்பாடு தோன்ற வேண்டும். பின்னர் ஆவி குளிர்ந்து மழைநீர் ஆவதுபோல பண்பாட்டிலிருந்து இறையன்பு தோன்றும். இப்பணியைச் செய்யாமல் [_15 சமயங்களில் கல்வி தன்னை உடையவரைச் செருக்கில் ஆழ்த்திவிடுகிறது. அவ்வாறு நிகழாமல் கல்வி மூலம் ஏனைய பயன்களைப் பெற வேண்டும் என்பதை அறிவுறுத்தவே பல்கடல் பிழைத்தும்' என்றார். செல்வத்தை 'அல்லல்’ என்று அடிகளார். குறிப்பிடுவது சிந்திப்பதற்குரியதாகும். செல்வத்தை ஈட்டல், காத்தல் முதலியவை துன்பத்தைத் தருவதாகும் எனப் பொருள்கூறுவாரும் உளர். செல்வம் என்னும் அல்லல்’ என்ற அடிகளாரின் சொற்கள் வேறுவகையாகச் சிந்திக்கத் துரண்டுகின்றன. இத்தொடருக்கு செல்வம் என்று சொல்லப்படுகிற துன்பம் என்று பொருள்கொள்ளுதலே நேரிதாகும். ஈட்டல், காத்தல் முதலியவை சிறந்துள்ள வழியும் செல்வர்கள் அமைதியின்றி வாழ்வதை இன்றும் நாம் காண்கிறோம். எல்லையற்ற செல்வம் சேர்ந்துழி இன்னதென்று சொல்ல முடியாத, விளக்கிக்கொள்ள முடியாத ஒரு பெருஞ்சுமை செல்வர்கள் மனத்தில் ஏறிவிடுகிறது. எனவேதான் அதனை செல்வமாகிய அல்லல் என்றார் அடிகளார். . செல்வத்தை அல்லல் என்று கூறிய அடிகளார், நல்குரவை(வறுமையை விடம் என்று கூறியமை மிகப் பொருத்தமானதாகும். சுமையைத் தாங்கிக்கொண்டு