பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருவாசகம் - சில சிந்தனைகள் வாழல்ாம்; ஆனால் விடத்தைத் தாங்கி வாழமுடியாது. அல்லல் வாழ்வை அழிக்காது; விடம் வாழ்வை அழித்துவிடும். எனவேதான் ‘நல்குரவு என்னும் தொல்விடம் என்றார். இந்த இடத்தில் நல்குரவு என்று அடிகளார் கூறுவதற்குக் கவனத்துடன் பொருள்கொள்ள வேண்டும். பொருளில்லாத வறுமை என்று பொருள்கூறிவிட்டால் பட்டினத்துப் பிள்ளைபோல முற்றுந்துறந்த முனிவர்கட்கும் வறுமை விடம் போன்றது என்று பொருள்கொள்ள நேரிடும். ஆதலால், நல்குரவு என்பதற்கு தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் கொண்ட பொருளையே இங்குக் கொள்ள வேண்டும். வறுமை என்பதற்கு போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம் என்று விளக்கமெழுதினார் அவர். பொருளின்மை வறுமையன்று; பொருளின்மையான் இந்தஇந்தச் சுகங்களை அனுபவிக்க முடியாமற் போய் விட்டதே என்று வருந்தும் மனநிலையே வறுமை எனப்படும். வளமான வாழ்வு வேண்டும் என்ற எண்ணத்தால், பல்வேறு இழிதொழில்களில் ஈடுபட்டாவது பொருளைச் சேகரிக்க வேண்டும் என்று மனத்தில் தோன்றும் எண்ணத்திலிருந்து விடுபடுதலையே, புல்வரம் பாய பல துறை பிழைத்தும் என்று இங்குக் குறிக்கின்றார். இன்று நாட்டில் வழங்கும் நாய்விற்ற காசு குலைக்கவா போகிறது என்னும் பழமொழி அடிகளாரின் இக்கூற்று எவ்வளவு சரியானது என்பதை விளக்கும். இறை உணர்விற்கு கல்வி, செல்வம், நல்குரவு என்பவை இடையூறாக இருப்பது இங்கு பேசப்பெற்றது. தெய்வம் என்பது ஒர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஒர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள்