பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 243 வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர். (42–47) கருவாய்த் தோன்றியதிலிருந்து உடம்புடன்கூடி பூமியில் பிறக்கும்வரை ஏற்படும் துன்பங்களிலிருந்து பிழைப்பதையும், உலகவாழ்வில் பாலப்பருவம், குமரப் பருவம் ஆகிய பருவ வளர்ச்சியில் ஏற்படும் துன்பங்களில் இருந்து பிழைப்பதையும் முன்னர்க் கூறினார். இந்தப் பருவங்களில் உலக பந்தபாசங்களில் ஈடு படுதல் இயல்பாதலின் பெரும்பாலானவர்க்கு இறையன்பு தோன்றுதல் எளிது அன்று. கடவுள் இல்லையென்பாரும், இருந்தாலும் அதுபற்றிக் கவலைப்பட வேண்டா என்பாரும், இளமைப்பருவம் தாண்டும்வரையில் இன்ப வேட்டையில் நாட்டம் கொள்வாரும் நாளாவட்டத்தில் மனம் மாறுபட வாய்ப்பு உண்டு. துன்பத்தின்மேல் துன்பம், அடிமேல் அடி ஏற்படும்போது தம்முடைய மன உறுதியால் அதனை மாற்றிக்கொள்ள முயலும் பருவம் இளமைக்க்ழிவோடு முடிந்துவிடக் காணலாம். உண்மையில் இத்துன்பங்கள் மறைவதில்லை. மனத்தென்பு காரணமாக இவற்றைக் கீழே அமிழ்த்திவிட்டு இன்பவாழ்வில் ஈடுபடுதல் உலகியற்கை, உடலிலுள்ள தெம்பும், மனத்திலுள்ள திண்மையும் வயது முதிர்ச்சியின் காரணமாகக் குறையக்குறைய முன்னர் அமிழ்ந்துகிடந்த துன்பங்கள், மனக்கவலைகள் என்பவை விஸ்வரூபம் எடுத்து மனிதனை அலைக்கழிக்கின்றன. அந்த நிலையில்தான் ‘தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி’ என்கிறார் அடிகளார். - 'சித்தம் உண்டாகி’ என்று அடிகளார் கூறுவதைக் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறு கூறினார் என்று