பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருவாசகம் - சில சிந்தனைகள் சிந்தித்தல் நலம். மனத்தின் அடிப்பகுதியில், இன்ப துன்பங்களுக்கு இடங்கொடாமல் இருப்பது சித்தமாகும். பாலப் பருவம்தொடங்கி முன்முதுமைப் பருவம்வரை இறை எண்ணம் தோன்றாமலா இருக்கிறார்கள்? இந்தப் பருவங்களிலுள்ள பெரும்பாலார் அன்றாடம் திருக் கோயில்களுக்குச்செல்வதும், அர்ச்சனை முதலியவற்றைச் செய்வதும், திருவிழாக்களில் கலந்துகொள்வதும் இன்றும் நடைபெறுகின்றதே. இவர்களுக்கு இறைபற்றிய எண்ணமும் நம்பிக்கையும் இல்லையா என்ற வினாத் தோன்றுதல் இயல்பு. மேல் மனத்தளவில் இறை நம்பிக்கையும், சடங்குகளில் பெருநம்பிக்கையும் கொண்டுள்ள பலர் கோயிலுக்குப் போவதும் வருவதும் பெரும்பாலும் பழக்க வசத்தாலேயே ஆகும். எனவே இவர்களுடைய செயல்களைவைத்து இறையுணர்வு பெற்றவர்களென்றோ, ஆழ்ந்த இறையன்பு உடையவர்கள் என்றோ கூறுவதற்கு இல்லை. இவர்கள் இறையன்பு மேல்மனத்தின் அடித்தளத் திற்குக்கூட செல்வதில்லை. மணிக்கணக்கில் சிவபூசை செய்பவர்களில் பெரும்பகுதியினர் ஆழ்ந்த இறையுணர்வு உடையவர்கள் என்று சொல்லுவதற்கில்லை. இவர் இத்தனை மணிநேரம் பூசை செய்பவர் என்று பிறர் கூறும் புகழ் மொழியைக் கேட்பதில் இன்பம் அடைபவர்கள் இவர்கள். இவர்களைப் பார்த்தே நாவரசர் பெருமான், பொக்கம் மிக்கவர் பூவும் நீரும்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே (திருமுறை:5-90-9) என்று பாடுகிறார். இத்தகையவர்களுடைய புறப்பூசை, மேல்மனத்தின் மேலாக இருக்கும் இறையன்பு என்பவற்றை ஒதுக்குவதற்காகவே சித்தம் உண்டாகி’