பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருவாசகம் - சில சிந்தனைகள் அடுத்து நிற்பது "முனிவிலாததோர் பொருள்” என்பதாகும். உலகப் பொருள்கள் எத்தகைய சிறந்தவை ஆயினும் தொடக்கத்தில் இன்பம் தந்து பின்னர் சலிப்பையே தரும். அவ்வாறில்லாமல் என்றுமே இன்பந்தரும் பொருள் இறைவன் என்று பலரும் பொருள் கூறியுள்ளனர். இப்பொருள் பொருந்துமா என்பது, சிந்திக்கற்பாலது. முனிவிலாத ஒர் பொருள் என்று இருக்குமேயானால் இவ்வாறு பொருள் கூறுவது சரி. ஆனால், முனிவிலாதது ஓர் பொருள் என்றல்லவா அடிகளார் கூறியிருக்கிறார். இதன்படி பார்த்தால் ஓர் பொருள் உண்டு: 9ئےlgت[ முனிவிலாதது என்று, அப்பொருளின் இயல்பை விளக்குகின்ற அடையாக, 'முனிவிலாதது என்ற சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளது. சைவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சமயத்தினருங் கூட இறை இலக்கணம் பேசும்பொழுது அது விருப்பு, வெறுப்பைக் கடந்தது என்றே கூறிச் செல்கின்றனர். வள்ளுவப் பேராசானும் வேண்டுதல் வேண்டாமை இலான்’ (குறள்:4) என்றே குறிப்பிடுகின்றார். வாழ்நாளில் பெரும்பகுதியை அவமே கழித்துவிட்டுப் பின்னர். மனத்தில் இறையுணர்வு த்ோன்றி, அது சித்தத்திலும் நிரம்புகின்ற நிலையில் அத்தெய்வம் தன்னை ஏற்குமோ, ஏற்காதோ என்ற ஐயம் தோன்றுதல் இயல்பன்றோ! அதனைப் போக்குதற்கே முனிவிலாதது ஒர் பொருள்' என்றார். - ஒருவன் புறத்தானாய் நின்றபொழுது தெய்வம் சேயோனாக நிற்குமேதவிர அவனை வெறுத்து ஒதுக்குவதில்லை. அதே மனிதன் அன்பனாக மாறிய பொழுது இறைவன் அவனுடைய மனத்துள் நெருங்கி நிற்கின்றானே தவிர அவன்பால் தனிவிருப்பம் காட்டுவதும் இல்லை. இறைவன் ஒருவனைத் தவிர உயிர்கள் அனைத்திற்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு.