பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 249 விரதமே பரம்ஆக வேதியரும் சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தம்தம் மதங்களே அமைவதுஆக அரற்றி மலைந்தனர் (48–53) கருவில் உருப்பெறுதல் தொடங்கி ஒர் ஆன்ம யாத்திரையையே அடிகளார் இப் போற்றித் திருஅகவலில் விரித்துரைக்கின்றார். ஒர் ஆன்மா இவ் உடம்பெடுத்துப் பிறத்தல், மேலும் முன்னேறிச் சென்று பிறவித் தளையிலிருந்து விடுபட்டு வீடுபேற்றினை அடைவதற்கே ஆகும். மானிடப் பிறப்பின் தொடக்க நிலையில் உள்ளவர்கள் இந்த ஆன்ம யாத்திரையில் ஈடுபட மாட்டார்கள். மானிடப் பிறப்பினுள்ளும் பலமுறை பிறந்து மேலான நிலைக்குவந்த ஆன்மாவின் யாத்திரையே இங்குப் பேசப்பெறுகிறது. இந்த நிலைக்கு வந்தவுடன் நேரடியாக வீடுபேற்றை அடையலாம் என்று நினைப்பவர்கள் பெருந்தவறு செய்கின்றார்கள். வாழ்வின் ஒவ்வொரு படியிலும் தோன்றும் இடையூறுகளைச் சந்தித்து, அவற்றை வென்று, இனி அமைதி கிட்டும் என்று நினைக்கின்ற நிலையிற்கூட இடையூறுகள் அடுக்கடுக்காய்த் தோன்றுகின்றன. அவற்றையும் கடந்து தெய்வம் என்ப்தோர் சித்தமுண்டாகி, முனிவிலாததாகிய இறைவனைக் கருதத் தொடங்கியவுடன் மறுபடியும் பிரச்சனைகள் தோன்றுகின்றன. இவ்விடத்தில் ஒரு நியாயமான வினாத் தோன்றும். முனிவு இலாத பொருளைக் கருதத் தொடங்கியவர்க்கு மறுபடியும் பிரச்சனையா என்ற வினாத் தோன்றும். இதுவரையில் தோன்றிய பிரச்சனைகள் ஒரு வகை; இனித் தோன்றப் போகின்ற பிரச்சனைகள் முற்றிலும் வேறுவகையானவை. இவற்றை இனிக் காணலாம். மனிதன், சமுதாயப் பிராணியாதலால் அவனைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்தும் நெருங்கிய சுற்றத்தாரிடம் 17