பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருவாசகம் - சில சிந்தனைகள் இருந்தும் தப்புதல் கடினம். அதனையே இங்கு, தொல் பசுக் குழாங்கள் என்று அடிகளார் குறிக்கின்றார். பசுக் குழாங்கள் என்பதில் பசு என்பது பசு என்ற விலங்கையும், மனிதர்கள் என்ற உயர்திணையையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். பசு என்ற சொல்லுக்கு மனிதர்கள் என்று பொருள் கூறுவது இருக்கு வேதத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது. தம்மைப் பற்றியிருக்கும் பற்றுக்களைத் துணிவோடு உடைத்தெறிந்துவிட்டு முன்னேற விரும்பும் ஒருவனைச் சுற்றத்தார் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டம் தடுத்து நிறுத்த முயலும். அதற்கு இரு காரணங்கள் உண்டு. அவன் இப்படித் துறந்துபோய்விட்டால் அவனால் தங்களுக்குக் கிடைக்கும் உதவி இல்லாமற் போய்விடுமே என்ற கவலை ஒருபுறம். அடுத்து, தலைவனில்லாத அவனுடைய குடும்பத் தையும் தாங்கள் தாங்கவேண்டிய நிலமை ஏற்படுமே என்ற கவலை மறுபுறம். இதனாலேயே சுற்றத்தார் அவனைத் தடைசெய்கின்றனர். 50; 51ஆம் வரிகள் வரலாற்று அடிப்படையில் சிந்திக்க வேண்டியவை ஆகும். வேதியர் என்ற சொல்லுக்கு வேதத்திலுள்ள கரும காண்டத்தைப் பெரிதுபடுத்தும் `பூர்வ மீமாஞ்சகர்கள் என்று பொருள் கொள்வது அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. காரணம், இருக்கு வேதத்தில் உள்ள 12 மண்டலங்களும் இன்ன யாகத்தைச் செய்தால் இன்ன பயன் கிட்டும் என்கின்றனவே தவிர விரதங்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. அடிகளார் தோன்றிய எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர்ப் பதினெண் புராணங்களும் மக்கள் வாழ்க்கை யைப் பெரிதும் ஆட்கொண்டிருந்தன. ஒவ்வொரு புராணத்திலும் குறைந்தது மூன்று நான்கு விரதங்களாவது பேசப் பெற்றிருக்கும். இவ்விரதங்களைக் கடைப்பிடித்தால் உடனே இந்திரப் பெரும்பதம் அடையலாம் என்று