பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 251 அப்புராணங்கள் கூறும். இவ்விடத்தில் ஒன்றை நினைவிற் கொள்ளுதல் நலம். ஏனென்றால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த பழைய புராணங்கள், புத்தர் காலத்திலும், அதற்குப் பின்னரும் அழிந்துபோயின. அசோகன் முதலிய பெளத்த மன்னர்கள் இப் புராணங்களுக்கு முக்கியத்துவம் தராததுடன் அவற்றை உதறியும் விட்டனர். குப்தர்கள் இந்துக்கள் ஆதலால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய புராணங்களைத் தேடலாயினர். அவை கிடைக்காமற் போகவே அவற்றை மனனம் செய்து சொற்பொழிவு செய்துகொண்டிருந்த பெளராணிக வேதியர்களை அழைத்து, புராணங்களை தேடித் தருமாறு கூறினர். நினைவில் இருந்த பாடல் களுடன் தாமாகப் பலகதைகளையும் எழுதிச் சேர்த்துப் பதினெண் புரணங்களையும் இப்பெளராணிக வேதியர்கள் உண்டாக்கினர். தம்முடைய பெயரைக் குறிப்பிடாமல் 'இப்புராணங்கள் அனைத்தும் வேதவியாசர் அருளியவை. என்றே கூறிவிட்டனர். இவற்றில், பல முரண்பாடுகளும், ஒரே புராணத்துள் முன்பின் முரண்பாடுகளும் நிறைந்து இருப்பதை இன்றும் காணலாம். இந்தப் புராணங்களை எழுதிய வேதியர்களும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களைத் தம் வயப்படுத்த முயன்ற பெளராணிக வேதியர்களும் எட்டாம் நூற்றாண்டுவரை வடநாட்டில் கொடிகட்டிப் பறந்தனர். ஒரு குறிப்பிட்ட விரதத்தை ஒரே முறை கடைப்பிடித்து மோட்சம் போனவர் கதைகள் புராணங்களில் நிறைந்துள்ளன. அவற்றையே இங்கு அடிகளார் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு. வேதங்களைச் சாத்திரங்கள் என்று கூறும் மரபு இல்லை. தர்ம சர்த்திரங்கள் என்ற தொகுப்பில் புராணங்களும் அடங்கும் ஆதலால், சாத்திரங்காட்டி அரற்றி மலைந்தனர் என்கிறார் அடிகளார். இப் புராணங்கள் சைவ, ճմ)Յ)յ6ՃՃT6Ջf அடிப்படையில் தோன்றியமையின் தம்முள் மலைதலுக்குக் காரணமாயின.