பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 திருவாசகம் - சில சிந்தனைகள் பாகுபாடு செய்வர். இவை இரண்டும் கற்பவரை மிக எளிதில் வசீகரிக்கக் கூடிய சிறப்புடையவையாகும். ஆன்மீகத் துறையில் ஓரளவு வளர்ச்சியடைந்தவர்களைக் கூட இப் பொருள்முதல் வாதங்கள் திசைதிருப்பிவிடும் ஆற்றல் பெற்றவை. மனத்தளவில் பொருள்முதல் வாதிகளாக இருப்பவர்கள்கூடப் பிறரால் ஏற்கப்பட வேண்டும் என்பதற்காகப் பூசை முதலிய சடங்குகளில் ஈடுபடுவதுண்டு. அத்தகையோர் இன்றும் உள்ளனர். இவர்களையே பொக்கம் மிக்கவர் என்று நாவரசர் குறிப்பிடுகின்றார். - மாயா வாதத்தைச் சண்ட மாருதம் என்று உருவகித்த அடிகளார் உலகாயதத்தைப் பாம்பென உருவகித்தது மிகவும் பொருத்தமேயாகும். காரணம், பாம்பு வருவதோ, கடிப்பதே, போவதோ எளிதில் அறிந்துகொள்ள முடியாத விசயங்கள் ஆகும். ஒரளவு பக்தி மார்க்கத்தில் செல்பவர்களைக்கூட உலகாயதப் பாம்பின் விடம் எளிதில் பற்றிவிடும். அதனாலேயே அடிகளார். இதனை ஒண்திறல் பாம்பு’ எனக் குறிப்பிடுகின்றார். பாம்பின் நஞ்சு இரத்த ஓட்டத்தில் கலந்து சில நாழிகையில் : உயிரையே போக்கி விடுவதுபோல சமய வாழ்க்கை வாழ்கின்றவர்களைக்கூட இந் நஞ்சு பற்றி அவர்கள் வாழ்க்கையைத் திசைதிருப்பிவிடும். இதனாலேயே அதனைக் கடுவிட'ம் என்றார். - பிரமத்தைத் தவிர அனைத்தும் பொய் என்று சொல்லுகிற மாயா வாதிகளை அடுத்து, இந்த உலகத்தைத் தவிர, பிரமம் உட்பட அனைத்துமே பொய் என்று சொல்லும் உலகாயத வாதிகளை வைத்தது சாலப் பொருத்தமே ஆகும். - இவைபோன்ற பல மாயைகள் ஆன்ம யாத்திரையில் முன்னேறுபவனைத் தடைசெய்கின்றன.