பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 255 கருவின் தோற்றம்முதல் பிறக்கும்வரையான இடையூறுகள், தன்னைமீறித் தனக்கு அப்பாற்பட்டுத் தோன்றுகின்ற இடையூறுகளாகும். பசி, நித்திரை முதலியவற்றால் வரும் இடையூறுகளைக் கடப்பதும், மாதர்தம் நயனத்திலிருந்து பிழைப்பதும் இவனுடைய சுய முயற்சியே ஆகும். இவை இரண்டுமே உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுவன ஆதலின், அறிவை வளர்த்து இவற்றை வெல்லவேண்டும் என்பது உட்பொருளாகும். அடுத்தபடியாக மத்தக் களிறு ஆகிய மனத்திடைத் தோன்றும் அவாவினை அடக்குவதும் வளர்ந்துவரும் அறிவின் செயலே ஆகும். ஏட்டுக் கல்வி, செல்வம், வறுமை ஆகியவற்றால் வரும் இடையூறுகள் புறத்தே நிற்பன ஆயினும், ஒருவனுடைய ஆன்ம வளர்ச்சியைப் பாதிப்பதைக் காண்கிறோம். கல்வியின் I j is soorsTóðr இறைவன் நற்றாள் தொழுதலை அடைய முற்படாமல், கல்வியிலேயே வாழ்நாளைச் செலவழிக்க முற்படுபவர்கள் ‘சுள்ளி பொறுக்கிக் குளிர் காயாமல் வாழ்நாள் முழுவதும் சுள்ளி பொறுக்குவதிலேயே காலத்தைச் செலவிடுபவர் ஆவர். அறிவை வளர்க்கவேண்டிய கல்வி பெரும்பான்மையும் அறிவு வளர்ச்சியுடன் அகங்காரத் தையும் வளர்த்துவிடுதல் கண்கூடு. எனவேதான் கல்வியை இடையூறுகளில் ஒன்றாகக் கூறினார் அடிகளார். உண்மையான கல்வி, அறிவின் துணைக்கொண்டு அவாவை அடக்கி ஆன்ம வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது இதன் உட்கிடக்கை ஆகும். மேற்கூறிய இடையூறுகளையெல்லாம் கடந்து அகங்காரமற்ற உண்மையான அறிவு வளர்ந்து உணர்ச்சிகளை அடக்கப் பழகியவுடன் முதலில் தெய்வம் என்பதோர் நினைவு உண்டாகி, அறிவின் துணைக் கொண்டு தெய்வத்தைப்பற்றி ஆயத்தொடங்கி, இந்த ஆய்விற்கு அப்பாற்பட்டது தெய்வம் என்ற உணர்வு