பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 திருவாசகம் - சில சிந்தனைகள் தோன்றுவதைத்தான் ‘தெய்வம் என்பதோர் சித்த முண்டாகி’ என்கிறார் அடிகளார். மலையின் முகட்டில் ஏறிவிட்டோம், இனி நம்மைத் தடுக்கும் இடையூறுகள் எதுவுமில்லை என்ற நிலைவரும் பொழுது அதுவே பெரிய இடையூறாக முடிந்துவிடுகிறது. ஆத்தமானவர்(நெருக்கமானவர்), அயலவர், சமயவாதிகள் என்பர்களுடைய தாக்கத்தால் விளையும் இடையூறுகள், ஆன்ம யாத்திரையில் வளர்ந்துவிட்ட நிலையில் குறுக்கிடும் அடுத்த இடையூறுகளாகும். இனிவரப்போகின்ற இரண்டு இடையூறுகளும் வளர்ச்சிபெற்ற அறிவுக்குச் சவாலாய் அமைந்தவையாகும். மேலே கூறப்பெற்ற இடையூறுகளை வெல்வதற்கு உதவிய அறிவு, ஒரளவு நன்கு வளர்ச்சியடைந்து விட்டமையின் தருக்கத்தை அடிப்படையாகக்கொண்ட மாயாவாதம் ருசிக்கத் தொடங்குகிறது. பிரமத்தைத் தவிர அனைத்துமே பொய் என்ற வாதம் முதலில் ருசித்தாலும் நாளா வட்டத்தில் மனத்தில் ஒரு வெறுமையை உண்டாக்கி விடுகிறது. இருபத்து நான்கு மணிநேரமும் உலகப் பொருள்களில் உணர்ச்சியோடு ஈடுபடும் வாழ்க்கை பொருள்முதல் வாதத்தில் செலுத்திவிடுகிறது. இவை இரண்டையும் கடத்தல் ஆன்மயாத்திரையின் கடைசிப் படிகளாகும். கல்வி, சமயவாதம், மாயாவாதம், பொருள்முதல் வாதம் இவை அனைத்திலும் செயற்படுவது அறிவேயாகும். மிக உயர்ந்ததும் ஈடின்ையற்றதுமான அன்பு என்ற உணர்விற்கு இதுவரை இடங்கிடைக்கவில்லை. இத்துணை தூரம் வளர்ந்துவந்த ஆன்மா தெய்வம் என்பதோர் சித்தமுண்டானபோதும் மேலும் பல இடையூறுகளைச் சந்திப்பதற்குக் காரணம் அந்த ஆன்மாவின் அறிவு தொழிற்பட்டதேயாகும். அங்ங்ணமின்றி அறிவை அடக்கி அன்பு என்னும் உணர்வு தொழிற்பட்டிருந்தால் மேலே