பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 257 கூறிய இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டிராது. சமயவாதிகள் தத்தம் மதங்களே உயர்ந்தது என்று சொல்லும் பொழுது அறிவு, வாதம் புரியத் தொடங்கிற்று. ஆனால் அன்பு முதிர்ந்திருப்பின் அவர்களோடு வாதம் புரியாமல் சிரித்துக்கொண்டே ஆன்மாவை முன்னேற்றி இருக்கும். அவாவை அடக்குதல் ஏறத்தாழ இயலாத காரியம். அவா மனித மனத்தின் இயற்கை என்றும் அதனைத் திருப்திப்படுத்துதல் தவறில்லை என்றும் அறிவு, வாதம் புரியும். ஆனால், அன்பெனும் உணர்வு மேம்பட்டிருப்பின் அதன் பயனாகத் தான்’ என்ற அகங்காரமும் தன்னுடைய அவா என்பதும் அழிந்து போயிருக்கும். அவா என்னும் மத்தக்களிற்றை அடக்க, அறிவு என்னும் அங்குசம் ஒரளவே பயன்படும். அது உன்மத்தக்களிறு ஆதலால், அங்குசத்திற்கு அடங்காது என்பதை அறியவேண்டும். அறிவையும் அடக்கி அன்பு மேம்பட்டிருப்பின் அந்த அன்பு மத்தக்களிற்றை அடக்கும் யாழிசையாகப் பயன்பட்டிருக்கும். மாயா வாதம், உலகாயதம் என்ற இரண்டிலும் அன்பு என்னும் உணர்விற்கு இடமில்லை. இரண்டிலும் அறிவே பயன்பட்டமையின் அவற்றுடன் போரடிப் பிழைக்க வேண்டும் என்கிறார் அடிகளார், தெய்வம் என்பதோர் சித்தம் உண்டானபொழுது ஒரளவு அன்பெனும் உணர்வும், ஓரளவு அறிவும் இடம் பெற்றிருந்தன. என்றாலும், நாளாவட்டத்தில் அன்பெனும் உணர்வை அடக்கி அறிவே தொழிற்பட்டமையின் இதுவரை கூறிய இடையூறுகளைச் சந்திக்கலாயிற்று. இறுதியாகப் போராட்டத்தைத் தவிர இவ்வழியில் அமைதி கிட்டவில்லை என்பதை உணர்ந்துகொண்ட ஆன்மா, அறிவை அடக்கிவிட்டு அந்த இடத்தை அன்பெனும் உணர்விற்குத் தருகிறது. இப்பொழுது அன்பு தொழிற்பட