பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருவாசகம் - சில சிந்தனைகள் ஆரம்பிக்கின்றது என்பதை அடிகளார் பின்னர்க் குறிக்கின்றார். இதுவரைக் கூறப்பெற்ற இயல்புகள் இறைநாட்டத் தால் முன்னேற விழைகின்ற எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானவை. இனி அடிகளார் சொல்லப்போகும் பகுதிகள் படர்க்கையில் கூறப்பெற்றிருப்பினும் அவர்தம் சொந்த அனுபவத்தையே கூறுகிறார் என்பதை அறிதல் வேண்டும். - தப்பாமே தாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுஉளம் உருகி அழுது உடல்கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும் படியே ஆகி நல்இடைஅறா அன்பின் (59–64) இடையூறுகளையெல்லாம் கடந்த நிலையில் அறிவின் துணைக்கொண்டு முன்னேற முடியாது என்பதை நன்குணர்ந்துகொண்ட ஆன்மா, அன்பைத் துணைக் கொள்ளத் தொடங்கியவுடன் முன்னர்ச் சித்தத்தில் தோன்றிய இறையுணர்வு இப்பொழுது அந்த அன்பிற்குப் பற்றுக்கோடாய் நிற்கின்றது. பற்றுக்கோடு கிடைத்தமை யின் அன்பு விரிந்து பணிபுரியத் தொடங்குகிறது. இந்த அன்பு பற்றுக்கோட்டை எவ்வாறு பிடித்துள்ளது என்பதைத் தப்பாமே தாம் பிடித்தது’ என்கிறார் அடிகளார். ஒருகால் இறுகப் பற்றிநின்று, மற்றொருகால் பிடிதளர்கின்ற நிலையில்லை என்பதை அறிவுறுத்தச் "சலியாது பிடித்தது என்கிறார். இங்ங்ணம் பற்றுக்கோட்டைப் பற்றியபோது இந்த ஆன்மா தங்கி இருக்கும் உடலில் சில வேறுபாடுகள் நிகழ்கின்றன. அவை அடுத்துப் பேசப்பெறுகின்றன. - தழலிற் பட்ட மெழுகுபோல உள்ளம் உருகுகின்றது; உள்ளே நடைபெறும் உருக்கம் வெளியே கண்ணிராகப்