பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 259 பெருகுகின்றது; இவ்வெளிப்பாட்டோடு நில்லாமல் உடல் நடுங்குகின்றது; அடுத்து, இருந்த இடத்திலிருந்து நடுங்கிய உடல் இப்போது இடம் பெயர்ந்து ஆடத் தொடங்குகிறது; பெருங் கூக்குரலிட்டு அலறுகின்றது; உள்ளே முதிர்ந்து பொங்கும் அன்பு பாட்டாக வெளிப்படுகிறது; இரு கையும் கூப்பித் தொழுகின்றது. தம் பிடியுள் அகப்பட்டதைப் பிடிகுறடும், பேதையும் எந்நிலையிலும் விட்டுவிடா என்று சொல்லும் படியாக, இவ் ஆன்மாவைப் பற்றிய அன்பு அதனை விடுமாறில்லை. அடிகளார் இங்குக் கூறிய இரண்டு உவமைகளும் சிந்திப் பதற்குரியன. இரும்புக் குறடும், பேதையும் தாமே சென்று ஒன்றைப் பற்றுவதில்லை. இரும்புக் குறடு ஒன்றை பற்றுவதற்கு ஒருவன் கர்த்தாவாக இருந்து உதவுகிறான். பேதையைப் பொறுத்தமட்டில் அவனைத் தொழிற் படுமாறு துண்டுகின்ற ஊந்துணர்ச்சி எது என்பதை அவன் அறியமாட்டான். குறடுக்கும் தன்னைப் பிடித்தவன் யார் என்று தெரியாது; பேதைக்கும் தன் உந்துணர்த்சி எது என்று தெரியாது. குறடுக்கும் பேதைக்கும் பின்னே ஒரு கர்த்தாவும், உந்துணர்ச்சியும் செயற்படுவதுபோல இங்கே இறைவன் மறைந்து நின்று அன்பெனும் உணர்வைத் துரண்டிச் செயற்படுமாறு செய்கின்றான். உந்துசக்தியாக இறைவன் உள்ளான் என்பதை எவ்வாறு அறிவது? மனித முயற்சியால் வெளிப்படும் அன்பு இடையீடுபட்டதாய், விட்டுவிட்டுத் தொழிற்படும். 'இடை அறா அன்பு என அடிகளார் கூறியதால், தம்முயற்சியால் வெளிப்பட்ட அன்பன்று இது என்பதையும், இறைவனாகிய உந்து சக்தியால் வெளிப் பட்டது இது என்பதையும் விளக்கினாராயிற்று. பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் கசிவது பெருகிக் கடல்என மறுகி அகம்குழைந்து அனுகுலம்ஆய் மெய்விதிர்த்துச்