பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருவாசகம் - சில சிந்தனைகள் சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நானது ஒழிந்து நாடவர் பழித்துரை பூனது ஆகக்......... (65–70) மனக்கசிவு அதிகமாகி, அக்கசிவே கடல்போன்று பெருகிற்று என்கிறார் அடிகளார். இதன் முன்னர் 'பசுமரத்தாணி அறைந்தாற்போல’ என ஒரு உவமை வருகிறது. ஓர் ஆணியை பச்சை மரத்தில் அடிப்பதற்கும் காய்ந்த மரத்தில் அடிப்பதற்கும் வேறுபாடு உண்டு. காய்ந்த மரத்தில் அறையப்பட்ட ஆணியைச் சாதாரண பிடிகுறடை வைத்துக்கொண்டு, அசைத்தே வெளியில் எடுத்துவிடலாம். ஆனால் பச்சைமரத்தில் அறையப்பெற்ற ஆணியை, புறத்தே உள்ள கருவிகொண்டு அசைத்து வெளியே எடுத்தல் ஏறத்தாழ இயலாத காரியம். அதுபோன்று அடிகளாரின் உள்ளத்தில் ஏற்பட்ட உருக்கம் சிலகாலம் உள்ளே நின்று பிற எண்ணங்களின் தாக்கத்தினால், வெளியேறும் ஒன்றன்று. அது என்றும் வெளியேறாத வகையில் நிலைத்துவிட்ட ஒன்றென்பதை அறிவிக்கவே பசுமரத்து ஆணி அறைந்ததுபோன்ற இடையறா அன்பு என்கிறார். அதனாலேயே அவ்வுருக்கம் கடலெனப் பெருகிற்று. இனி, இந்த உருக்கம் காரணமாக உடலிடைத் தோன்றும் வேறுபாடுகள் உலகத்தாரைப் பொறுத்த மட்டில் வேறுவகையாகத் தோன்றுகின்றன. பாண்டி நாட்டின் தலைமை அமைச்சராயிருந்த ஒருவர், ஒற்றை வேட்டியுடன், கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் தாமாகவே சிரித்துக் கொண்டும் அழுதுகொண்டும் தெருவழித் திரிவாரேயானால் சாதாரண மக்கள் அவரைப் பேய்க் கோட்பட்டவர் என்றும், பைத்தியம் என்றும் அவர் காதுபடப் பேசியதில் வியப்பொன்றும் இல்லை. இன்னும் சிலர் அமைச்சராக இருந்தவர் அதைவிட்டுவிட்டு