பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் * 261 ஏன்தான் இப்படி அலைகிறாரோ என்று பழித்தும் கூறினர். - ஆன்ம யாத்திரையில் எல்லாப் படிகளையும் கடந்து, இருபத்துநான்கு மணிநேரமும் பரம்பொருளோடு தொடர்புகொண்டு ஆனந்த சாகரத்தில் மூழ்கியிருக்கும் ஒருவருக்கு, இந்தச் சாதாரண மக்களின் பழிப்புரை பழிப்புரையாகக் காதிற் படுவதில்லை. தம்முடைய உண்மையான நிலைக்கு அளிக்கப்பட்ட ஏற்றமிகு புகழுரை என்ற கருத்திலேயே பழித்து உரை பூண் அதுவாக என்கிறார் அடிகளார்.

  • éā毫量●●●●●●●●●争叠...கோணுதல் இன்றிச் சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரமா அதிசயம் ஆகக் கற்றா மனம்எனக் கதறியும் பதறியும் மற்றுஓர் தெய்வம் கனவிலும் நினையாது அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே...........曾●●●事号命é糖幽- (70–77)

"சதுர் என்பது உலகியல் அறிவுகொண்டு இன்னது செய்யப்படவேண்டும், இன்னது தவிர்க்கப்பட வேண்டும் என்று வேறுபடுத்தி அறியும் அறிவாம். இனி இழந்து' என்பதால் இவ்வேறுபடுத்தி அறியும் அறிவை இழந்து என்பது பொருளாகும். இவ் இழத்தல் இருவகையில் வரும். இழத்தல், சுய அறிவை இழந்த பைத்தியங்கட்கும், அடிகளார்போன்ற இறையன்பு முதிர்ந்தவர்க்கும் பொது வாகும். அப்படியானால் இங்கே அடிகளாருக்கு ஏற்பட்ட 'சதுரை இழந்தநிலை பைத்தியத்தால் வந்ததா, அன்றி முதிர்ந்த அன்பால் வந்ததா என்ற வினாவிற்கு விடைகூறுவார்போலக் கோணுதலின்றி என அடை கொடுத்தார். மனத்தில் ஏற்பட்ட கோணுதலுடன் சதுரை