பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 திருவாசகம் - சில சிந்தனைகள் இழத்தல் பைத்திய நிலை; கோணுதலின்றிச் சதுரை இழத்தல் இறையன்பு முதிர்ந்தவர் நிலை. 'அறிமால்' என்பது முரண்பட்ட இரு சொற்களின் கூட்டாகும். மால் என்பது மயக்கம், அறிதல் என்பது தெளிவு. இவ்விரு சொற்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் ஒரு புதிய செய்தியைத் தருகிறார் அடிகளார். இன்னது செய்யவேண்டும் என்று உலகியல் முறையில் அறிந்திருந்தும் அதன் எதிராக ஒன்றைச் செய்தல் இறை அடியார்களுக்குள்ள தனிச்சிறப்பாகும். தாமே தனியாக நின்று ஆடுதல், பாடுதல், சிரித்தல், அழுதல் முதலிய செயல்களைச் செய்தல் மால்கொண்டவர்களின் செயல்க ளென்று அறிந்திருந்தும், தெளிந்த அறிவுடன் இருந்து கொண்டே இச்செயல்களில் ஈடுபடுதல் 'அறிமால் கொண்டு செய்கின்ற செயல்களாகும். சுய நினைவோடு இருந்துகொண்டும் அன்பு மீதுறிய காரணத்தால் ஆடுதல், பாடுதல் ஆகிய செயல்களைச் செய்தமையின், இறுதியாகச் சென்று சேரவேண்டிய முத்தி நிலையைப் பலரும் கண்டு வியக்கும்படி அருளினன்' என்க. பரத்தில் உறைபவனாகிய பரம்பொருள் குருவடிவு எடுத்துப் பூமியில் திருவடிகள் தோயவந்து தமக்கு அருள் செய்ததை சிறுமையென்று இகழாதே என்றதால் குறைத்து மதிப்பிடவில்லை என்கிறார் அடிகளார். இதற்கோர் காரணமுண்டு. அமைச்சராகக் குதிரைமேல் வந்தவர், திருப்பெருந்துறையிற் கண்ட காட்சி பாண்டி நாட்டின் பல இடங்களிலும் காணப்படும் காட்சியே ஆகும். ஒரு குரு மரத்தடியில் அமர்ந்திருப்பதும் அவரைச் சுற்றிச் சீடர்கள் அமர்ந்திருப்பதும் இயல்பான ஒன்றாகும். அடிகளாரின் உடன்வந்தவர்களும் அங்கு நின்ற ஏனையோரும் அவ்வாறுதான் நினைத்தனர். அந்தக் குரு அவரைத் திரும்பிப் பார்க்காமல் இருக்கவும், இவர்