பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 263 உள்ளிருந்து ஏதோ ஒரு குரல் அமர்ந்திருப்பவன் சிவபெருமானே என்று கூற, அந்தக் குருவிடம் செல்கிறார் அடிகளார். அவர் திருவடி தீட்சை செய்கிறார். அந்த விநாடியில் இதனைச் செய்தவர் மனிதரல்லர், அருபரத் தொருவனே அவனியில் வந்து தனக்கு அருள்செய்த குரு என்ற உள்ளுணர்வு தோன்றியவுடன் கற்றாவைப்போல் அடிகளாரின் மனம் உருகிற்று. அந்த உருக்கம் சாதாரண மானிட குருவால் விளைந்ததன்று என்று அடிகளார் உணர்கின்றார். அதனையே, இது, தம் தகுதிக்கு ஏற்றதுதான் என்று நினையாமல், யாரும் பெறுதற்கரிய நிலையென்று உணர்கின்றாராதலின் 'சிறுமையென்று இகழாதே' என்றார். அத்தகைய பெருஞ்சிறப்பு, செய்தவரின் வள்ளன்மையே தவிரத் தன்தகுதியால் அன்று என்று நினைந்தவுடன் அதுவரை அவர் அறிந்திருந்த தெய்வங்கள் மனத்திரையில் வந்துபோகின்றன. இனி அவர்களை நினைக்கவேண்டிய நிலை இல்லை; அவர்களிடம் பெறவேண்டியதும் எதுவுமில்லை என்ற நினைவு வந்தவுடன் மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது’ என்றார். இந்த நினைவும் நன்றிப் பெருக்கும் சேர்ந்தவுடன் தம்மைமீறிக் கதறுதலும், பதறுதலும் நிகழ்கின்றன. - 曾确帕瞿食豪键叠姆物佛*峰峰举姆龟曾曾命轴端-●**事辅参举够●蟒沙岭திருவடி இணையைப் பிறவினை அறியா நிழலது போல முன்பின் ஆகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி அன்புஎனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதனன்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண் களிகூர நுண்துளி அரும்பச் சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி (77–87)