பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருவாசகம் - சில சிந்தனைகள் குருவைக் கண்டமாத்திரத்தில் உரை குழறிநின்ற இப்பெருமானார், அவர் திருக்கை பட்டவுடன் புதிய அனுபவத்தைப் பெறுகிறார். 77 தொடக்கம் 79 வரையான அடிகளில் குருவினிடம் பெற்ற இறையனுபவத்தின் உச்சநிலை பேசப்பெறுகிறது. ஞானாசிரியரின் மேனி முழுவதையும் கண்ட அடிகளார், அதில் இலயித்துத் திருமுடி தொடக்கம் கண்டுகொண்டே வந்து இறுதியில், குருவின் திருவடிகளில் நிலைத்துவிடுகிறார். அத்திருவடிகள் தம் பிறப்பை அறுத்துப் பெருவாழ்வு நல்கப்போகின்ற ஒரே சாதனம் என்பதை அடிகளார் உணர்கின்றார். அதன் பயனாக அந்த ஆசிரியருடைய திருவடி அங்கும் இங்கும் அசையும் பொழுதெல்லாம் அடிகளாரின் கண்கள் அத்திருவடியைப் பின்பற்றியே சென்றன. அவ்வாறு பின்பற்றிச் சென்றதற்கு அடிகளாரே ஒர் உவமை கூறு கின்றார். ஓர் உருவின் நிழல் எக்காலத்தும் எக்காரணங் கொண்டும் அவ் உருவைவிட்டுப் பிரியாததுபோல அடிகளாரின் கண்களும் இத் திருவடியைப் பின்பற்றியே சென்றன. எந்த ஒரு பொருளையும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டோ, கேட்டுக்கொண்டோ இருப்பின் அதிலே சலிப்புத் தட்டுவது இயவ்பு; இது மனிதமணத்தின் இயற்கை அந்த இயற்கைக்கு முரணாக ஒரு சிறிதும் வெறுப்புத் தட்டாமல், தளர்ச்சியில்லாமல் குருவின் திருவடிஇணைக்கு முன்னும் பின்னுமாக அடிகளாரின் கண்ணும் மனமும் சென்று வந்தன என்பதையே திருவடி இணையைப் பிறிவினை அறியா நிழலதுபோல முன்பின் ஆகி முனியாது’ என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மனமும் கண்ணும் செல்லும்போது இவ்விரண்டும் இரண்டு பெரும்பணிகளைச் செய்கின்றன என்கிறார் அடிகளார். மனத்தில் தோன்றிய அன்பு