பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 265 என்னும் உணர்வுகாரணமாக, என்பு உருகுவதுபோன்று ஒரு நிலை ஏற்படுகின்றது. உள்ளத்தின் ஆழத்தில் நிகழும் இந்த வேறுபாட்டின் காரணமாக, கண்களில் நீர் பெருகுகின்றது. தலைவனே! தலைவனே! என்று வாய் அரற்றுகின்றது; உணர்வு பெருகியதன் காரணமாகத் தொடர்ந்து பேசமுடியாமல் நாக் குழறுகின்றது. இவற்றையல்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அல்லி மலர் கூம்புவதுபோலக் கைகள் குவிகின்றன. தாமரை மலர் விரிவதுபோல இதயம் மலர்கின்றது. இவ் இரண்டு மலர்களும் சூரியனைக் கண்டவுடன் ஒன்று குவிதலும் மற்றொன்று விரிதலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதுபோல குருவின் திருவடிகள் ஆகிய கதிரவனைக் கண்டவுடன் அடிகளாரின் கைகள் ஆகிய அல்லி குவிந்தது; இதய கமலம் மலர்ந்தது. கதிரவனைக் காணுமுன்னர் அல்லி மலர்ந்திருந்தது கமலம் குவிந்திருந்தது. கதிரவனைக் கண்டவுடன் இந் 18 நிகழ்ச்சிகள் மாறி இடம்பெறுகின்றன. அதேபோலக் குருநாதரைக் காணுமுன்னர் அடிகளாரின் கைகள் விரிந்திருந்தன; இதயம் கூம்பியிருந்தது. அமைச்சராக இருந்தமையின், சொக்கநாதனையும், அரசரையும் கை குவித்து வணங்குவதல்லது பிறரை வணங்கத் தேவை இல்லாதிருந்தது. இப்பொழுது நிலைமை மாறி விட்டமையின் விரிந்திருந்தவை குவிந்தன, குவிந்திருந்தது விரிந்தது. - இதயம் மலர்வதும் கை குவிதலும் உள்ளத்தின் ஆழத்தில் தோன்றும் அன்பெனும் ஆறு கரைபுரண்டு ஒடத் தொடங்கியமையின் நிகழ்ந்தனவாம். இதயம் மலர்ந்தது உள்ளே நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். கை குவிதலும், கண்களில் துண்துளி அரும்புதலும் புறத்தே நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகும். இவை இரண்டையும் அடுத்து, குழறிய நாவுடன் சில சொற்கள் வெளிப்பட்டன. உணர்வின்