பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருவாசகம் - சில சிந்தனைகள் உச்சநிலையில் இந்த நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. எந்த ஓர் உணர்வும், ஒரே நிலையில் அதாவது உச்ச நிலையில் நீண்ட நேரம் இருக்க முடியாது என முன்னரே கூறியுள்ளோம். அடிகளாரைப் பொறுத்தவரை 'அன்பெனும் ஆறு' கரைபுரண்டதும் இதயம் மலர்ந்ததும் நுண்துளி அரும்பியதும் நாக் குழறியதும் உச்சகட்ட நிலையாகும். இந்த நிலையில், எந்த ஒன்றையும் கோவையாக பேச (ԼՔւգ-աո5/ என்பதையே 'உரைதடுமாறி' என்று பேசுகின்றார். இந்த அக, புறச் செயல்களை அடுத்து ஓர் அற்புதம் நிகழ்ந்ததாக அடிகளார். பேசுகின்றார். நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி என்ற தொடர் நின்று சிந்திக்க வேண்டிய பகுதியாகும். பொறி, புலன்களை நல்லவை என்று யாரும் பேசுவதில்லை. காரணம் மனித மனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவை நிற்றலானும், தம் விருப்பம்போல தொழிற்படுதலானும் அவற்றிற்கு நல்லவை என்று யாரும் பெயர் கொடுப்பதில்லை. அடிகளாரே ‘புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய என்று முன்னரே குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்க, திடீரென்று நன்புலன்' என்று இப்புலன்களுக்கு நற்சான்றிதழ் வழங்கக் காரணம் என்ன? இதுவரை அவருடைய கட்டுப்பாட்டிற்கு அடங்காத புலன்கள் இப்பொழுது குருநாதரைக் கண்ட உடன் தாமே அடங்கி ஒடுங்கி விடுகின்றன. கண் அவரையே பார்க்கின்றது; காது அவர் கூறுவதையே கூர்ந்து கேட்கிறது; நா நாத! நாத! என்றே அரற்றுகின்றது; கைகளும் குவிந்தே உள்ளன. இப்படியாகப் பொறிகள் அனைத்தும் அடிகளாரின் உத்தரவின்றியே குருநாதர் பணியில் ஈடுபட்டுவிட்டமையின் அவற்றை நன்புலன்’ என்றார்.