பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 267 உணர்ச்சியிலிருந்து விடுபட்டு ஒருவாறு பொறி புலன்களைத் தம் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் எதிரேயுள்ள குருநாதரின் வடிவையும், அவர் தமக்குச் செய்த அருளையும் அடிகளார் நினைந்து பார்க்கிறார். எல்லையற்ற நன்றி காரணமாகக் குருநாதரின் புகழைப் பேசத் தொடங்குகிறார். உலகப் பொருள்களிடத்துச் செலுத்தப்பெறும் அன்பு தோன்றி, வளர்ந்து, மறையும் இயல்புடையது. எனவே அந்த அன்பு சாயும் அன்பு எனப்படும். குருநாதரிடம் செலுத்தப்பட்ட அன்பு மேலும் வளர்கின்றதே அன்றிச் சாயும் அறிகுறியே இல்லை. எனவே, சாயாத அன்பினை உள்ளத்துட்கொண்டு நாள்தொறும் அது தழைக்கும் படியாகத் தாயாக இருந்து வளர்க்கின்ற பெருமானுக்கு வணக்கம் என்று கூறுகின்றார். தழைப்பவர்’ என்று படர்க்கையில் வைத்துக் கூறினாரேனும் அடிகளாரைப் பொறுத்தமட்டில் இது அவருக்கு நடைபெற்ற நிகழ்ச்சியே ஆகும். மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றுஎனக்கு ஆர்.அமுது ಕ್ಡ போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேஆர் வெல்கொடிச் சிவனே போற்றி மின்ஆர் உருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆஆ என்தனக்கு அருளாய் போற்றி. (88–99) ‘மெய்தரு வேதியன் என்பது சத்திய சொரூபி' என்ற வடமொழியைப் பின்பற்றி வந்ததாகும். கை தரவல்ல கடவுள்' என்பதனால் பிறவிக்கடலுள் ஆழ்கின்ற உயிர்களைக் கைகொடுத்துத் துரக்கிவிட வல்லவன் என்ற பொருளைத் தந்துநின்றது. -