பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 திருவாசகம் - சில சிந்தனைகள் பொன்மயமான மதுரையம்பதிக்குத் தலைவனே போற்றி. ‘கூடல் இலங்கு’ என்பதற்கு கூடல் என்ற பெயரை உடைய மதுரையம்பதியில் என்று பொருள் கூறுவாரும், தமிழ்ச்சங்கத்தின்(கூடலின்) தலைவனே போற்றி என்பாரும் உளர். இவற்றை அன்றி இவ் அடிக்கு மற்றோர் பொருளையும் கூறலாம். கூடல் என்றால் பலரும் கூடுகின்ற இடம் என்ற பொருளைத் தரும். திருக்கோயிலில் தனியே இருக்கின்ற பெருமான், அத்திருக்கோயிலைவிட்டு மரத்தின் அடியில் அடியார்கள் கூட்டத்தினிடையே(கூடல்) அமர்ந்திருந்த பெருமான், குருவடிவுடன் இருந்தமையின் கூடல் இலங்கு குருமணி’ என்றார். முதலடியில் மதுரையைக் கூறியவர், இரண்டாவது அடியில் திருப்பெருந்துறையிற் கண்ட அடியார் கூட்டத்தை நினைப்பது நியாயமேயாகும். ஆடக மதுரைக்கு அரசாய் இருந்த ஒருவன், எல்லாவற்றையும் துறந்து, துறவுக்கோலம் பூண்டு, குருநாதர் வடிவில் அடியார் கூடலில் இருந்தமை அவரை வியப்பில் ஆழ்த்தியதால் இறைவனது இரண்டு நிலைகளையும் அடுத்தடுத்துக் கூறினார். - காலத்தால் அழியாத நான்கு மறைகளுக்கும் தலைவன் என்பது 'மூவா நான்மறை முதல்வா என்ற அடியின் பொருளாகும். இன்றுள்ள நான்கு வேதங்களில், கிருஷ்ணயஜுர் வேதத்தின் நான்காவது பிரபாடகத்தின் இறுதியிலுள்ள ரீருத்ரம் தவிர வேறெங்கும் சிவனைப் பற்றிய பேச்சே இல்லை. இருக்கு வேதத்தில் 'ருத்ரன்' என்ற பெயருடன் பேசப்பெறும் தெய்வம் மகா மட்ட மானதாய், அவிஷ்பாகம் பெறுவதற்குத் தகுதியற்றதாய், யாகத்தில் உதிர்ந்து விழும் பொருட்களைப் பொறுக்கி எடுத்துக்கொள்ளும் சிறு தெய்வமாகவே பேசப்