பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 269 பெற்றுள்ளது. அப்படியிருக்க, இருக்கின் மிலிந்த இறைவர் அவர்போலாம் (திருமுறை : 1–24–10) என்று ஞானசம்பந்தரும், எண்ணுடை இருக்குமாகி இருக்கினுட் பொருளுமாகி'(திருமுறை : 4-48-8) என்று நாவுக்கரசரும் கூறுவதன் பொருள் நன்கு விளங்கவில்லை. இதனோடு அல்லாமல் இருக்கு இலங்கு திருமொழி வாய் எண்தோள் ஈசர் (நாலாயிர 1505) என்று திருமங்கை ஆழ்வாரும் கூறியுள்ளமை மேலும் குழப்பத்தை அதிகம் ஆக்குகின்றது. இதுவுமன்றி, ஞானசம்பந்தர் இருக்கு’ என்ற பெயரை ஒர் இடத்திலும் (259), நாவுக்கரசர் ஒர் இடத்திலும் (4625) பயன்படுத்தி உள்ளனர். அடுத்து, 'சாமவேதம்’ என்ற பெயரை ஞானசம்பந்தர் ஓரிடத்திலும் (247), நாவுக்கரசர் நான்கு இடங்களிலும் (4428, 4824, 6276, 6745) குறிப்பிட்டுள்ளனர். மேலும், வேதம் அல்லது மறை" என்ற பொதுச்சொல்லை, ஞானசம்பந்தர் எட்டு இடங்களிலும் (55, 109, 454, 722, 1450, 1879, 2179, 3820), நாவுக்கரசர் இரண்டு இடங்களிலும் (4428, 7100), சுந்தரர் இரண்டு இடங்களிலும் 7985, 8248) எடுத்து ஆண்டுள்ளனர். (மேலே காட்டப்பெற்ற எண்கள் கங்கை புத்தக நிலையத்தார் வெளியிட்டுள்ள 'அடங்கன்முறை தேவாரத் திருப்பதிகங்கள்’ என்ற நூலில் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தொடர் எண்களாகும்). இக் குறிப்புகளில் காணப்பெறும் புதுமை என்னவென்றால் 'ருத்திரன்' என்ற பெயரை இவர்கள் யாருமே குறிப்பிடவில்லை. ருத்திரன் என்ற பெயரைமட்டும் பயன் படுத்தும் இருக்கு வேதம் எப்படி இவ்வளவு செல்வாக்குப் பெற்றது என்பது தெரியவில்லை. நால்வர் பெருமக்கள் அனைவருமே யஜுர்வேதம் என்ற பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை; அதர்வணமும் அவ்வாறே. எனவே 'நான்மறை முதல்வர் என்று அடிகளார் குறிப்பிட்டு உள்ளமைக்குப் பொருள் விளங்கவில்லை. -