பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருவாசகம் - சில சிந்தனைகள் விகிர்தன் என்றால் உலக நடைமுறைக்குப் புறம்பு ஆனவன் என்ற பொருளைத் தரும். இயற்கையைப் பொறுத்தமட்டில் ஒரு பொருள் என்றால் அதற்கொரு வடிவு இருந்தே தீரும். இனிக் காற்று, நீர் முதலியவை தமக்கென ஒரு தனி வடிவம் பெறாவிடினும் கொள்கலத்தின் வடிவைப் பெற்றே தீரும். ஒளியைப் பொறுத்தமட்டில் இந்த விதி ஏற்புடையதன்று. அதற்கென தனி வடிவு எதுவுமில்லை. மின்னல் என்பது தோன்றி மறையும் இயல்புடையது; அதனை நிறுத்துதல் என்பதும் இயலாத காரியம். ஆனால், இறைவன் அழகிய மின்னலைப்போன்ற உருவத்தை உடையவன் என்பதால், நில்லாத மின்னலின் வடிவத்தைத் தன்வடிவமாக்கி நிலையாக நின்றான் என்பது பொருளாகும். இயற்கைக்குப் புறம்பான இதனைச் செய்வதால் அவன் விகிர்தன்' எனப்பட்டான். நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை' (திருமுறை : 6-43-1 என்று நாவரசர் பாடுவதும் இது கருதியே போலும். படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி கடையேன் அடிமை கண்டாய் போற்றி (100–11) இங்கு இடர் என்று கூறப்பட்டது உயிர்கள், தாம் வாழும் காலத்தில் தோன்றும் துன்பங்களும், பிறவியாகிய துன்பமுமாம், இடரைக் களையும் எனப் பொதுவாகக்