பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 : திருவாசகம் - சில சிந்தனைகள் பெரும் பொருள் அணுவாகவும் இருக்கின்றது என்று நினைத்தவுடன் அந்த வியப்புப் பன்மடங்காகிறது. ஒரு நாட்டில், ஒரே இனத்தில் தோன்றியவர்கள் ஆயினும் மக்களிடையே வேறுபாடுகள் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. வேறுபட்ட மனோநிலையை உடைய இவர்கள் அனைவரும் ஒரே விதமான வழிபாட்டு முறையை மேற்கொள்வது என்பது இயலாத காரியம். இந்து சமயம் என்று சொல்லப்பெறும் ஒரு பெரிய எல்லையுள் அறுவகைச் சமயங்கள் இருப்பதையும் சிவ வழிபாட்டையுடைய சைவர்களிடையேகூட காபாலிகர், மாவிரதியர், கோளகி சைவர், வீரசைவர் ஆகிய பல்வேறு பிரிவுகள் இருப்பதும் இதனை வலியுறுத்தும். இவர்கள் அனைவரும் கடவுட் பொருளைக் கருத்திற் கொண்டார் களாயினும் அப்பொருளுக்குக் குறியீடாக ஏதோ ஒரு வடிவத்தை வைத்துள்ளதைக் காணலாம். எங்கும் நிறைந்து என்றும் நிலைபெற்றுள்ள பரம்பொருளுக்கு அவரவர் விருப்பம்போல் வடிவம் கொடுப்பதில், குறியீடாக ஒன்றை வைப்பதில் எவ்விதத் தவறுமில்லை. ஆனால், இந்தக் குறியீட்டையே பரம்பொருள் என்று நினைப்பது, அதற்கு உரிய சடங்குகளைச் செய்வதுடன் நின்றுவிடுவது ஆகிய இரண்டும் ஆன்ம முன்னேற்றத்திற்குப் போதுமானவை -#©©. எத்தகைய குறிகளை வைத்துக் கொண்டாலும் அதற்குச் சில குணங்களைக் கற்பித்துக் கொள்ளுதல் மனித இயல்பு. அவ்வாறு கற்பிப்பதிலும் தவறொன்றும் இல்லை. இதனை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் திருமுருகாற்றுப்படை அதற்கு விடை கூறுகிறது. திருவேரகத்தில் வழிபடும் அந்தணர்கள் வழிபட,