பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 273 புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நா இயல் மருங்கில் நவிலப் பாடி, விரை உறு நறு மலர் ஏந்தி, பெரிது உவந்து, ஏரகத்து உறைதலும் உரியன். - - (திருமுருகாற்று 184-189) என்று நக்கீரர் கூறி முடிக்கின்றார். இங்கு முருகன் படிமமாக அமைக்கப்பெற்றுள்ளான். என்றாலும், அந்த வடிவத்திற்குச் சில குணங்களைப் பாடல் பேசுகிறது. இதற்கு நேர்மாறாகக் கல்வியறிவில்லாத குறவர்கள் இதே முருகனை வழிபடுவதையும் திருமுருகாற்றுப்படை குறிக்கின்றது. சிறு தினை மலரொடு விரைஇ, மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ, ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் (திருமுருகாற்று 218-220) இதனையல்லாமல், குன்றுதோறாடலிலும் பின் வருமாறு பேசப்பெறுகிறது. செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச் செயலைத் தண் தளிர் துயல் வரு காதினன், கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன், குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம் கொடியன், நெடியன், தொடி அணி தோளன் (திருமுருகாற்று206-21) இவ் அடிகளுக்கு வேறு பொருள் கூறுவார்கள் உளரேனும், இவ் அடிகள் முருகன் என்ற குறியீட்டையும் அதன் குணங்களையும் குறிப்பதாகக் கொள்வதில் தவறில்லை.