பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருவாசகம் - சில சிந்தனைகள் மேலே குறிக்கப்பெற்ற பாடற்பகுதிகள் ஒன்றுக் கொன்று முரண்பட்ட மூன்று நெறிகளைப் பின்பற்றி ஒரேபொருளை வழிபடும் முறையைப் பேசுகின்றன. அந்த ஒரே பொருளுக்கு அவரவர் விருப்பப்படி மூன்று வகையான குணங்களைக் கற்பித்துள்ளனர். பொருள் ஒன்றே என்ற கருத்தில்தான் அடிகளார் குறியே போற்றி என்றார். அந்தக் குறிக்குப் பல்வேறு குணங்களைக் கற்பித்ததும் பொருந்தும் ஆதலின், குணமே போற்றி என்றார். இனி மேலே கூறப்பெற்றவர்கள் முரண்பட்ட மூன்று வழிகளில் ஒரே முருகனை வழிபடுகின்றனராதலின் 'நெறியே போற்றி என்றது பொருந்தும். அடுத்துள்ள 'நினைவே போற்றி என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பல்வேறு எண்ணங்களுக்கும் இடந்தரும் மனத்தில் அவ் எண்ணங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, அக் குறியினிடத்துக் கொண்ட ஈடுபாடு என்ற ஒரே நினைவுடன் மேலே கூறிய மூவகையினரும் வழிபடுதலைத் திருமுருகாற்றுப்படை குறிக்கின்றது. நினைவே போற்றி என்று அடிளார் கூறியது இதனையே ஆகும். சுருங்கக் கூறுமிடத்து குறி ஒன்றுதான்; நினைவும் ஒன்றுதான். ஆனால், மனிதன் கற்பித்துக்கொண்ட குணங்கள் பல குறியை அடைய மேற்கொண்ட வழிகளும் Η J61), இவர்கள் அனைவருக்கும் ஒருவனே அருள் செய்கின்றான் என்ற துணுக்கத்தை, வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட, ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே (திருமுருகாற்று: 248, 249) என்ற அடிகளில் திருமுருகாற்றுப்படை கூறிச் செல்கின்றது. 'நெறியே போற்றி என்று அடிகளார் கூறியதற்கு வழிபடும் நெறிகள் என்று பொருள்கொண்டு இதுவரை