பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 275 விளக்கம் தரப்பெற்றது. இவ்வாறு கொள்ளாமல் இவர்கள் மூவருக்கும் பொதுவான ஒரு தன்மையை எடுத்துக் கொள்ளலாம். அத்தன்மை எது? கும்பிடுதல் ஆகிய ஒன்றே ஆகும். அப்படியானால், கும்பிடுதலே ஒரு நெறியாக மாறிவிடுகிறது. இக் கும்பிடுதலின் பயனை மிக உயர்ந்த ஆன்மீகவாதிகள் விரும்புவதில்லை. கும்பிடுதலையே முழுப்பயனாகக் கொண்டனர். கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார் (பெ.பு : திருக்கூட்ட - 8) என்று சேக்கிழார் கூறுவதும் இதனையே ஆகும். 'நெறியே போற்றி என்பதற்கு, வழியும் பயனும் அதுவே ஆகும் என்று பொருள்கொண்டுவிட்டால் 'நினைவே போற்றி என்பதன் பொருள் யாது? இது ஒரு சிக்கலான பகுதியாகும். வழியும் பயனும் அது என்று கூறிய பின்னர் எஞ்சியிருப்பது எதுவுமில்லை. அப்படி இருக்க நினைவே போற்றி என்றால் அது யாருடைய, எந்த நினைவைக் குறிக்கும் என்ற வினாத் தோன்றுமன்றே? நின்று நிதானித்தால் பொருள் எளிதில் விளங்கிவிடும். நெறி என்ற ஒன்றை வகுத்துக்கொண்டு அதன் வழிச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்ற ஆன்மாவிற்கு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனம் என்ற ஒன்று இருந்தே தீரும். எந்த நிலையிலும் அந்த மனம் மாறுபட்ட பல்வேறு நினைவுகளுக்கும் இடந்தரும் ஒன்றாகும். எனவே அந்த நினைவுகளை அகற்றி நெறியிற் செல்ல வேண்டுமென்ற ஒரே நினைவோடு முன்னேற வேண்டும். இந்த இரு சிந்தனைகளையும் விட்டுவிட்டு மூன்றாவதாக உள்ள ஒரு சிந்தனையைக் கொள்ளுதல் நலம். குறி, குணம், நெறி, நினைவு ஆகிய நான்கிற்கும் போற்றி என்று அடிகளார் கூறுதலின் குறியாக உள்ளவனும், குணமாக உள்ளவனும், நெறியாக உள்ளவனும், அந்த நெறியிற் செல்ல வேண்டும் என்ற