பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 திருவாசகம் - சில சிந்தனைகள் நினைவாக உள்ளவனும் அவனே என்று பொருள் கொள்வது சாலச் சிறந்ததாகும். வானோர்க்கு அரிய மருந்தே போற்றி ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி (16–117) வானோர் என்றது தேவர்களைக் குறிப்பதாகும். தேவர்களை, மனிதரினும் மேம்பட்டவர்கள் என்று தமிழர் என்றுமே கருதியதில்ல்ை. தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, தேவர்கள் சூக்கும உடலுடன் உள்ளவர் என்பதேயாகும். மனிதரிடத்திலுள்ள அத்தனை குறைகளும், குற்றங்களும் தேவரிடத்திலும் உண்டு. பரு உடம்புடன் இருத்தலின் மனிதர்கள் நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது. சூக்கும உடலுடன் இருத்தலின் தேவர்கள் அதனையும் செய்யமுடியும். இது கருதியே வள்ளுவர், - தேவர் அனையர் கயவர் அவருந்தான் மேவன செய்தொழுக லான். (குறள்:1073) என்று கூறிப்போனார். வானவர்களாக ஆன பின்னரும் அந்த நிலை மாறாது இருக்க அரும்பாடுபட்டு அமிழ்தைத் தேடினர். ஆனால், அதை உண்டதனால் அவர்கள் எதிர்பார்த்த சாகாநிலை அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை இளங்கோவடிகள் இவ்வாறு கூறுகிறார். விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் (சிலம்பு:12-முன்றிலின் சிறப்பு-21) இளங்கோவடிகள் இவ்வாறு கூறியதால் தேவர்கள் தேடி, உண்ட மருந்து(அமுதம்) அவர்களுக்குச் சாகா வரமும் தரவில்லை; வீடுபேற்றை அடையும் வழியையும் காட்டவில்லை. இந்த அப்பாவித் தேவர்கள் அமிழ்தை