பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 277 அடைவதற்கு எடுத்த முயற்சியில் பாதியளவு முயற்சியை இறைவனை அடையப் பயன்படுத்தி இருப்பார்களே ஆனால் அமிழ்தை உண்டதைவிட மாபெரும் பயனைப் பெற்றிருப்பர். அதனாலேயே 'அரிய மருந்து' என்றார் அடிகளார். வெறும் மருந்து (அமிழ்தம் வாழ்நாளை ஒரளவு நீட்டியிருக்கும்; ஆனால், அரிய மருந்து மீட்டுவரா நெறியைத் தந்திருக்கும். வானோர் மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் என்று கூறும் கருத்தைக் கொண்டாலும், இறைவன் அவர்களைப் பொறுத்தமட்டில் 'அரிய மருந்தாகவே உள்ளான். ஆனால், சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் (ஏனோர்) ஒன்றியிருந்து நினைத்த பொழுதெல்லாம் காணக்கூடியவன் (எளியன்) ஆகவும், குறையிரந்து நிற்கையில், எதிர் நின்று அருளொடு கேட்டு குறையைப் போக்கும் தலைவன் இறைவன்) ஆகவும் உள்ளான் என்பதை 'ஏனோர்க்கு எளிய இறைவா’ என்றார். மூஏழ் கற்றம் முரண்உறு நரகுஇடை ஆழாமே அருள் அரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா_பேற்றி அத்தா போற்றிஅரனே போற்றி உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி (118-125) மூவேழ் சுற்றம்’ என்பது இருபத்தொரு தலைமுறை என்று பொருள்படும். தன்னை அண்டிவந்த அடியார்களை மட்டுமல்லாது அவர்கள் சந்ததிகளையும் இருபத்தொரு தலைமுறைவரை கொடிய நரகில் வீழாமல் அருள் செய்பவன் என்றார். இன்றைய விஞ்ஞானம் ஒருவனுடைய மரபணுக்கள் (Genes) இருபத்தொரு தலைமுறைவரை தொடர்ந்து