பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருவாசகம் - சில சிந்தனைகள் வருகின்றன என்று கண்டுள்ளது. ஒருவனுடைய குணாதிசயங்களை நிர்ணயிப்பவை மரபணுக்களே ஆகும். இவை இருபத்தொரு தலைமுறைவரை நீடிக்கின்றன என்று இன்றைய விஞ்ஞானம் கண்ட உண்மையை எட்டாம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியாகிய திருவாதவூரர் போகிறபோக்கில் எடுத்துச் சொல்லுகிறார். அரசர்களின் கொட்டத்தை அடக்க பரசுராமன் இருபத்தொரு தலைமுறைவரை அவர்களை அழித்தான் என்று பழைமையான மகா பாரதம் பேசுவதும் இந்த நுணுக்கத்தை அறிந்தேயாகும். எண்ணத்தை முழுவதும் வெளிப்படுத்தக்கூட முடியாதவை சொற்கள். அந்தச் சொற்களினால் அனைத்தையும் கடந்துநிற்கின்ற பொருளை விதந்து ஒதுதல் இயலாத காரியம் என்பதால் 'உரை இறந்த ஒருவ’ என்றார். உரையால்தான் சொல்ல முடியவில்லை; சொற்களை எல்லாம் கடந்து இவ் அண்டத்தையும் தாண்டிச் செல்லக்கூடிய உணர்வு மிக நுண்ணியதும் மிகப் பெரியதுமாக உள்ளதாயிற்றே. அந்த உணர்வினாலாவது உணரப்படக்கூடிய பொருளா என்றால் அது இயலாது என்பதை உணர்வு இறந்த ஒருவ’ என்றார். அருமையில் எளிய அழகே போற்றி கருமுகில் ஆகிய கண்ணே போற்றி மன்னிய திருஅருள் மலையே போற்றி என்னையும் ஒருவன் ஆக்கி இரும்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி அழிவுஇலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மான்நேர் நோக்கி மணாளா போற்றி வான்.அகத்து அமரர் தாயே போற்றி (126–136)