பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் : 279 இவ் இடத்தில் மட்டுமல்லாமல் முன்னரும் பல இடங்களில் திருவருளை மலைக்கு ஒப்பிட்டுப் பேசி உள்ளார். மலை இலக்கு என்பது உலகு வழக்கு. அப்படியிருக்க, மலைபோன்றதாகிய திருவருள் முன்னே இருக்கவும் அதனைக் காணாமலேயே, பயன்படுத்திக் கொள்ளாமலேயே, அருகிற் போகாமலேயே பலர் வாழ்ந்து மடிகின்றனர். மன்னிய மலை என்றதால் அது இருந்து, மறைந்து, மறுபடியும் தோன்றுகின்ற இயல்புடையதன்று. என்றும், நிலைபேறுடையதாய், யாரும் காணக்கூடியதாய், அனைவரும் எளிதில் தன்பால்வந்து அடையக் கூடியதாய் உள்ள மலையை, திருவருளுக்கு உவமைகறியது சாலச் சிறந்ததாகும். எத்தனைபேர் தன்பால் வந்து தங்கலாம் என்ற வரையறை இல்லாமல் அனைவருக்கும் இடந்தரும் மலைபோல, தன்னை வந்தடையும் அனைவருக்கும் இடத்தந்து காப்பது திருவருள் என்ற கருத்தையெல்லாம் உள்ளடக்கி 'மன்னிய திருவருள் மலை’ என்றார். திருவருளைப்பற்றி நினைத்தவுடன் அது தமக்குச் செய்த பேருபகாரத்தை உடனே நினைவுகூர்கிறார் அடிகளார். என்னையும் என்பதிலுள்ள உம்மை இழிவுச் சிறப்பு உம்மையாகும். ‘என்னையும் ஒருவானாக்கி’ என்பது கடையனாகிய என்னையும் ஒருபொருளாக்கி என்ற பொருளைத் தந்துநிற்கும். இதன் பின்னே வருகின்ற ஒன்றரை அடிகளில், பிறர் யாருக்கும் கிடைக்காத ஒரு மாபெருஞ் சிறப்பு, தமக்கு வழங்கப்பெற்றது என்று அடிகளார். பேசுகிறார். வழியோடு சென்ற தம்மை ஈர்த்து, திருவடி தீட்சை செய்தார் ஆகலின் இருங்கழல் சென்னியில் வைத்த சேவக என்றார். இந்தப் பொருளை மனத்திற்கொண்டு என்னையும் ஒருவனாக்கி என்ற தொடரை மீண்டும் சிந்தித்தால் புதியதொரு பொருள் கிடைக்கின்றது. பாண்டி நாட்டில் பண்டுதொட்டு பன்னூறு அமைச்சர்கள் வந்துபோயினர். இன்று அவர்களுடைய பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை.