பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 திருவாசகம் - சில சிந்தனைகள் அந்த அமைச்சர் வரிசையில் ஒருவராகிய தம்மையும் 'ஒருவன் ஆக்கி’ என்றதால் ஈடு இணையற்றவனாக ஆக்கினார் என்றார். ஈடிணையற்றவராக ஆவதற்குக் காரணம் இருங்கழல் சென்னியில் வைத்தமையே ஆகும். இருங்கழல் சென்னியில் வைத்த செயல் உடனிருந்த வேறுயாருக்கும் கிடைக்காமல் தம் ஒருவருக்குமட்டுமே கிடைத்ததாகலின் ஒருவனாக்கி என்றார். இவ்வாறு பொருள்கொள்ள, புறநானூற்றில் வரும் எய்யாது ஆகின்று எம் சிறு செந்நாவே (புறம் : 148 ) என்ற அடியும், அதற்கு எழுதப்பெற்ற உரையும் தூண்டுகோலாய் நிற்கின்றன. இந்த அடிக்கு உரை வகுத்த உரையாசிரியர் 'பொய் கூறாமையின் செந்நா என்றார் ; தற்புகழ்ந்தார் ஆகாமையின் சிறு நா என்றார் என்று முடிக்கின்றார். இதே கருத்தில்தான் என்னையும் ஒருவனாக்கி’ என்ற தொடருக்கு உரை காணப்பெற்றது. ஒருவனாக்கி’ என்றது தற்புகழ்ச்சி ஆகிவிடுமோ என்று ஐயுறுவார்க்கு, ‘என்னையும்’ என்பதிலுள்ள இழிவுச்சிறப்பும்மை ஐயத்தைப் போக்குவதாக அமைந்துள்ளது. 'தொழுத கை என்பது தொழுத உடன் என்னும் பொருள்தந்து நிற்கின்றது. தொழுபவர் இருவகைப்படுவர். உலகியல் துன்பங்களைக் களையவேண்டுமென்று வேண்டி நிற்போர் ஒருபுறம், பிறவியாகிய பெருந்துன்பத்திலிருந்து தம்மைக் கரையேற்ற வேண்டும் என்று வேண்டுவோர் ஒருபுறம். இவ்விரு சாராரின் விருப்பங்கள் வெவ்வேறு ஆயினும், இருவரின் செயல்களும் ஒன்றேயாம்; தொழுதலே அச்செயலாகும். இத் தொழுதலுக்குப் பயன், என்று கிட்டுமோ என்று ஐயுற்று நிற்பாரை நோக்கி, தொழுத உடனேயே என்ற பொருள்பட தொழுத கை’ என்றார். - 'ஆனந்த வாரி' என்று சொல்லியிருந்தாலே போதுமானது, அழிவிலா என்ற அடை ஆழ்ந்த