பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவாசகம் - சில சிந்தனைகள் நாம, ரூபம் கடந்த பரம்பொருளுக்கு இறை அனுபவத்தை முழுவதுமாகப் பெற்ற அருளாளர்கள் நாம, ரூபம் கற்பித்துள்ளனர். பல்வேறு அடியார்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்தமையின் பல்வேறு வடிவங்களை அவரவர்களுடைய இறையனுபவத்திற்கேற்பப் படைத்து இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லாப் பொருளிலும், எல்லா இடத்திலும் நீக்கமற நிறைகின்ற பொருள் இறைவன் ஆதலின் எந்த வடிவத்தைப் படைத்தாலும், அந்த வடிவத்திலும் அவன் இடம் கொண்டு இருப்பான் என்பதில் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. இந்த அடிப்படையில் சிவபுராணத்தின் முதல் அடியை எடுத்துக் கொள்வோமேயானால், இரண்டு பகுதிகளைக் காண்கிறோம். 'நமச்சிவாய வாழ்க’ என்பது ஒரு பகுதி. 'நாதன் தாள்வாழ்க’ என்பது மற்றொரு பகுதியாகும். 'நமச்சிவாய' என்ற சொல் ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்லப்பெறுவதாகும். நமச்சிவாய வாழ்க’ என்று கூறும்போது இந்த மந்திரம் வாழ்க’ என்று அடிகளார் குறிப்பிடுகிறாரா என்று சிந்தித்தால், ஓர் உண்மை நன்கு புலப்படும். இந்தச் சொல்லினால் அடிகளார். மந்திரத்தைக் குறிப்பிடவில்லை, இறைவனையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும். அப்படியானால் 'நமச்சிவாய' என்பது இறைவனுடைய பெயர் என்ற கருத்தில் கூறியிருக்கிறாரா என்றால், அதுவும் இல்லையென்று தோன்றுகிறது. ஆழ்ந்து சிந்தித்தால் 'நமச்சிவாய' என்று கூறும்போது அந்த ஒலி வடிவத்தைமட்டும் அடிகளார் குறிப்பிடுகின்றார் என்பது நன்கு தெளியப்படும். . இந்நிலையில் மந்திரமும் ஒலிவடிவுதானே அப்படி இருக்க மந்திரத்தைக் குறிப்பிடவில்லையென்று கூறியது