பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 281 சிந்தனையுடன் அடிகளார் தந்ததாகும். வாரி என்பது கடல். அது வற்றுதல் என்றோ ஒருநாள்(அக்கினிப் பிரளய காலத்தில்) நிகழ்ந்தே திரும். ஆனந்தம் என்பது உணர்ச்சி. இது மகிழ்ச்சியைவிட உயர்ந்ததாயினும் மிகுவதும் குறைவதும் அதனுடைய இயற்கை கடலின் வற்றும் குணத்தையும், மிகுவதும் குறைவதும் ஆகிய ஆனந்தத்தின் குணத்தையும் நீக்குவதற்காகவே அழிவிலா என்று அடை கொடுத்தார். அழிவதும் ஆவதும் என்று தன்வினையால் கூறியது பொருளின் இலக்கணமாகும். எந்த ஒரு பொருளுக்கும் தோற்றம், அழிவு என்ற இரண்டும் உண்டு. எந்த ஒரு பொருளும் தானே தோன்றித் தானே அழிவதில்லை. காரணம், அவை சடப்பொருளாதலின், ஒருவன் அவற்றைத் தோற்றுவிக்கவும் அழிக்கவும் வேண்டும். இவ் இரண்டு செயல்களையும் நடத்தும் கர்த்தா நேரடியாக நில்லாமல் மறைமுகமாக நின்று இதனைச் செய்தலின் அப்பொருள்கள் தாமே தோன்றுவதுபோலவும், தாமே அழிவதுபோலவும் ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றன. கர்த்தாவாக இருக்கின்றவன் இறைவனாதலின் அவனைப் பொறுத்தவரை தோற்றமுமில்லை அழிவுமில்லை. அப்படியானால் அழிவதும் ஆவதும் இல்லாய் போற்றி என்று கூறியிருக்கலாமே! 'கடந்தாய் போற்றி என்று கூறுவதன் நோக்கமென்ன? பொருளில்லாதவன், உணவு இல்லாதவன், உடையில்லாதவன் என்று சொல்லும்போது, பொருள், உணவு, உடை என்ற மூன்றும் இவனினும் வேறுபட்டு நிற்பதை உணர முடியும். அதுபோல, அழிவதும் ஆவதும் இல்லாய் என்று சொன்னால், அழிதல் ஆதல் ஆகிய இரண்டும் இவனினும் வேறாக நின்றுவிடும். அவ்வாறில்லாமல் அழிவு, ஆக்கல் என்று இரண்டையும் இவனுடைய இச்சாமாத்திரத்தால் செய்யக்கூடியவன் ஆதலானும், இவை இரண்டும் அவனை ஏதும் செய்யா ஆதலானும் கடந்தாய் போற்றி என்றார். ஆக்கல், 19