பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 283 அடுத்துள்ள நீருக்கு நாற்றம் என்று சொல்லப்படும். மணம் இல்லை. தூய்மையான நீர் எவ்வித மணமும் இல்லாமல் இருக்கும். ஆனால் நீருக்கு உரு உண்டோ என்று வினா எழுந்தால் அது தங்கியிருக்கும் கொள் கலத்துக்கு ஏற்ற உருவைக் கொள்ளும் என்க. எனவே நாற்றத்தைத் தவிர்த்து நீரிடை நான்காய்' என்றார். அடுத்துள்ளது. தீ. நாற்றம், சுவை என்ற இரண்டும் போக எஞ்சிய பண்புகள் அதன்பாலுள்ளன. கொள் கலனுக்கு ஏற்ற வடிவை நீர் பெறுவதுபோலத் தீ எந்த வடிவையும் பெறுவதில்லை. அடிபெருத்து நுனி சிறுத்து நிற்பதே தீயின் இயல்பு என்க. அடுத்துவருவது காற்று என்று பொருள்படும் வளி ஆகும். இதற்கு இரண்டு பண்புகள் உண்டென்கிறார் அடிகளார். நாற்றம், சுவை, உருவம் ஆகிய மூன்றும் தவிர்த்து தொடு உணர்வும், ஒலியும் ஆகிய இரண்டும் உண்டாதலின் வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய்’ என்றார். அடுத்துள்ளது ஆகாயம் எனப்படும் வெளி ஆகும். இதற்கு 'ஒசை என்ற ஒரேயொரு பண்புமட்டுமே உண்டு. பாரில் தொடங்கி ஆகாயம் வரையுள்ள ஐந்து பூதங்களையும் வரிசைப்படுத்திய அடிகளார். இந்த ஐந்துமே இறை சொரூபம் என்பதை அறிவிக்க, பரந்தாய், நிகழ்ந்தாய், திகழ்ந்தாய், மகிழ்ந்தாய், விளைந்தாய் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றார். இந்த வைப்பு முறையே ஒரு சிறப்பை உடையதாகும். பிரளயகாலத்தில் நிலம், நீரிலடங்க, நீர் தீயில் அடங்க, தீ வளியில் அடங்க, வளி ஆகாயத்தில் அடங்கிவிடுகிறது. மீண்டும் உற்பத்திக் காலத்தில் இவை ஆகாயத்தில் தொடங்கி, முறையே ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு, நிலம்வரை பஞ்ச பூதங்களாகப் பரிணமிக்கின்றன.