பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 285 அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ஆர் அமுதக் கடலே போற்றி ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி பாகம் பெண்உரு ஆனாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்று ஒர்பற்று இங்கு அறியேன் போற்றி (145–155) ‘மற்றோர் பற்றிங்கு அறியேன்” என்று கூறியதால் ஏதோ ஒரு பற்று, தம்பால் நிறைந்திருப்பதை அடிகளார் குறிப்பிடுகிறார் என்பது விளங்கும். அந்த ஒன்றைத்தவிர மற்றொரு பற்றில்லை என்பதால் அந்த ஒருபற்று எது? என்று சிந்திப்பது நலம். திருப்பெருந்துறையில் குரு தரிசனம் கிடைக்கும் விநாடிவரை அமைச்சராக இருந்த ஒருவருக்கு எத்தனையோ பற்றுக்கள் இருந்திருக்க வேண்டும். குருவின் திருவருள் கிடைக்கப் பெற்றபின் இப்பாடல் பாடப்பெற்ற தாகலின், இருந்த ஒருபற்று என்பது திருவடிப் பற்றையே குறிக்கும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. - (குறள்-350) என்ற குறளின் முழுப்பொருளையும் இங்கே காணலாம். குற்றாலத்து எம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி பாங்குஆர் பழனத்து அழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி இத்தி தன்னின்கீழ் இரு மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி தென்நாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி (156–165)