பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 திருவாசகம் - சில சிந்தனைகள் மேலே காட்டியதுள் இறுதி. இரண்டு அடிகளும் (164,165) சிந்திப்பதற்குரியவை. மிகப் பழங்காலந்தொட்டே தென் நாட்டவர்கள் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதும், வேத காலத்திற்கூட, அக்கினி வழிபாட்டைப் பெரிதுபடுத்திய வைதிகர்களுக்கு எதிராகச் சிவ வழிபாடு இங்கே நிலைத்திருந்தது என்பதும் ஆய்வாளர்கள் கண்ட முடியாகும். கிருஸ்ணயஜீர் வேதத்தில் இடம்பெற்றுள்ள பூரீருத்திரத்தில் நம: சிவாய; சிவ தராயச' என்று வருகின்ற ஒரு இடத்தைத்தவிர வேறெங்கும் சிவ சப்தம் இடம் பெறவில்லை. இங்குங்கூட சிவாய' என்பது, மங்களத்தைச் செய்பவன் என்ற பொருளில் வந்துள்ளதே தவிரப் பெயர்ச் சொல்லாக வரவில்லை. "ஸ்வேதாஸ்வதர' உபநிடதத்தில் மட்டும் சிவனுக்கு முதலிடம் தரப் பெற்றுள்ளது. ஆனால் அந்த உபநிடதத்தைச் சங்கரர் முதலிய யாரும் கையாள வில்லை. இருக்கு முதலிய வேதங்களில் 'ருத்திரன்', 'நீலகண்டாய', 'பகுனாம்பதி’ போன்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. சங்கப் பாடல்களில் ஆலமர் செல்வன்', 'நீலமணிமிடற்றோன்', 'வாலிழை பாகத்து ஒருவன்’ என்ற பெயர்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் வைத்து நோக்கும் பொழுது பரம்பொருளைத் தென் நாட்டவர் சிவன் என்று அழைக்கின்றார்கள் என்பது தெளிவாகும். இதனையே, ‘தென்னாடுடைய சிவன்’ என்றார். உபநிடதங்கள் பிரமம் என்று சொல்வதும் சிவனைத்தான் என்ற குறிப்புப்பட 'எந்நாட்டவர்க்கும் இறைவா’ என்று கூறினார். ஏனக் குருளைக்கு அருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன். தமியேன் போற்றி களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி