பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 287 நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி (166–178) திருவிளையாடல் புராணத்தில் காணப்பெறும் பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்த படலம்' என்னும் இக்கதை சற்றுச் சிந்திப்பதற்குரியது. எல்லா உயிர்களையும் படைத்தவன் இறைவன்தான் என்று எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. ஆனால், விலங்கினங்களிலேயே மிகக் கீழானதாக எண்ணப்படும் ஒரு தாய்ப்பன்றியையும், குட்டிகளையும்பற்றிய கதை இது. தாயை இழந்த பன்றிக் குட்டிகளுக்கும் தாய்ப்பன்றியாக மாறிப் பாலூட்டினான் என்றால், இறைவனுடைய எளிவந்த தன்மைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறெதுவும் இல்லை. அன்றியும், இறைவனைப் பொறுத்தமட்டில் பன்றிக் குட்டிகளும், மனிதர்களும், எல்லா உயிர்களும் அவன் படைத்தனவே ஆகும். தாயாகநின்று இவ்வுயிர்களைப் படைத்த அவனுக்கு அவ்வுயிர்களுள் வேறுபாடோ, உயர்வு தாழ்வோ தெரிவதில்லை. 'இருள் கெட அருளும் என்ற அடியில் வரும் இருள் என்ற சொல்லுக்கு துன்பம், நரகம் முதலிய பொருள் களைக் கூறலாமேனும் அஞ்ஞானம் என்ற பொருளே சிறப்புடையதாகத் தெரிகின்றது. இறைவன் திருவருள் கைகூடினால் ஒழிய அஞ்ஞானத்தைப் போக்குதல் இயலாதகாரியம். அஞ்ஞானத்தைப்போக்கும் அவனுடைய அருள், நம்முடைய தகுதி நோக்கி வருவது ஒன்றன்று. தகுதி நோக்கி வருவதாய் இருப்பின் இருள் கெட என்ற தொடரின்பின், உதவும் அல்லது புரியும் அல்லது செய்யும் என்ற சொற்களில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி இருப்பார். அருளும் என்றதால், அச்செயல் அவன்