பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 திருவாசகம் - சில சிந்தனைகள் கருணையின்பாற்பட்டதேயன்றி நம் தகுதி நோக்கி அன்று என்க. முன்னரும் ஏனக் குருளைக்கு அருளினன்' என்று கூறியுள்ளார். மாபெருங் கல்வியாளரும் நல்ல இறைநேசரும் ஆகிய திருவாதவூரர் இப்பிறப்பெடுத்ததன் பயன் அஞ்ஞானத்தை ஒழித்து மெய்ஞ்ஞானத்தைப் பெறுதலேயாகும் என்பதை நன்கு அறிந்திருப்பார். அதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. எத்துணை முயன்றும் அது கைகூடவில்லை ஆதலால் தளர்ந்தேன் அடியேன் தமியேன்” என்று கூறுகின்றார். சில நாழிகைக்கு முன்வரை பெரும் பதவியில் இருந்த ஒருவர் அடியேன்” என்றும், தமியேன்” என்றும், தளர்ந்தேன்’ என்றும் கூறுவது, ஒரு கணநேரத்தில் ஆன்மிகத்தின் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டார் என்பதையே குறிக்கின்றது. அந்த நிலை வந்தாலொழிய இச்சொற்கள் தோன்றா. இந்த நிலை வருவதற்குக் காரணம், அவன் அருளே என்பதைத்தான் 'இருள்கெட அருளும் இறைவா’ என்று முன்னரும் கூறினார். துன்பம் தொடர்கின்ற பொழுதில் அனைவருடைய மனமும் இறையருளைச் சிந்திக்கும். அந்தச் சிந்தனை தானும் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் தோன்றி மறையும் இயல்புடையது. அவ்வாறில்லாமல் மனம் முழுவதும் இறையருளில் ஈடுபட்டிருக்க வேண்டுமே ஆனால் அதுவும் அவன் அருளாற்றான் கிட்ட வேண்டும் என்பதை விளக்கக் களங்கொளக்(மனம் முழுவதும் கருத அருளாய்' என்று கூறினார். மேலே கூறப்பெற்ற முறையில் மனம் முழுவதும் இறையருளைச் சிந்திக்கின்ற நேரத்திற்க.ட திடீர் திடீரென்று அச்சம் தோன்றுவது இயல்பு. இங்கு கூறப் பெற்ற அச்சம் உலகியல் முறையில் தோன்றும் அச்சமன்று. இப்பொழுது மனத்திடை நிரம்பியிருக்கும் இறையுணர்வு