பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருவாசகம் - சில சிந்தனைகள் மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சுஏர் அடியாள் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி இலங்கு சுடர்எம் ஈசா போற்றி (179–186) திருப்பெருந்துறையில் அடியார் புடைசூழ இருந்த திருக்கோலம் அந்தணக் கோலம் என்பது பேசப்பெற்றது. அடுத்து நெறியே போற்றி என்றார். அதாவது உலகியல் வாழ்வில், உயர்பதவியில் இருந்த தம்மை, அனைத்தையும் துறந்து அடியார் கோலங்கொண்டு இவ்வழிச் செல்வாயாக என்று குருவடிவில் இருந்தவர் புதுவழி காட்டினார். ஆதலின், நெறியே போற்றி என்றார். புதுவழி காட்டியவரை வழியேநெறியே என்கிறார் அடிகளார். தளர்ந்தேன் அடியேன் தமியேன்” என்று முன்னர்க் கூறிய 170ஆவது அடியும், முறையோ தரியேன் முதல்வா என்ற 180ஆவது அடியும் அலந்தேன் நாயேன் அடியேன்” என்ற 185ஆவது அடியும் இதுவரை சொல்லிக் கொண்டு வந்த சொற்களோடு இயைவதாக இல்லை. இறைவனுடைய எளிவந்த தன்மையைக் கூறிக்கொண்டு வந்த அடிகளார் இருங்கழல் சென்னியில் வைத்தான் என்று 130ஆவது அடியில் முன்னர்க் கூறியுள்ளார். அப்படியிருக்க, தளர்ந்தேன் (170) என்றும், தரியேன்(180) என்றும், அலந்தேன் (185) என்றும் கூறியது ஏன்? இருங்கழல் சென்னியில் பட்டவுடன் அதுவரைக் கனவிலும் கருதி அறியாத இறையனுபவக் கடலில் மூழ்கிவிட்டார் அடிகளார். அதிலேயே இருக்கவேண்டும் என்று நினைத்த அவரை, அவ் அனுபவம் சற்றும் எதிர்பாராத விதமாக விட்டுநீங்கிவிட்டது. வாதவூரரை இறைவன் ஆட்கொண்டது அவரைக்கொண்டு திருவாசகம்