பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 21 சரியா என்ற வினாத்தோன்றும் மந்திரமும் ஒலி வடிவுதான். ஆனால் மந்திரத்தை மந்திரமாகமட்டும் செபிக்கும்பொழுது இறைவனுடைய ஒலிவடிவு அங்கே தோன்றுவதில்லை. ஒலிவடிவாக நினைந்து தியானிக்கும் பொழுது மந்திரம் அங்கே தோன்றுவதில்லை. மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை' (திருமந்திரம் : 2264) என்ற மூலரின் வாக்கு இக்கருத்தை நன்கு விளக்கும். நமசிவாய' மந்திரத்தைச் செபிப்பவர்கள் திரும்பத்திரும்ப அதைச் சொல்லும் பொழுது அந்த ஒலி அதிர்வுகள் ஒலியாகவே நின்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாகத் தியானத்தில் ஆழ்ந்துசென்று ஒலிவடிவான இறைவனை ஆழ்மனத்திற் கொண்டுவரும் பொழுது இந்தமந்திரம் அங்கே மறைந்துவிடும். இறைவன் ஒலி வடிவினன் என்பது தமிழ் நாட்டார் மிகப் பழங்காலந்தொட்டு அறிந்திருந்த உண்மையாகும். இங்கு ஒலி என்று நாம் குறிப்பிடுவது, அசுத்த மாயா காரியம் ஆகிய இந்த உலகில் தோன்றும் ஒலியன்று. அசுத்த மாயையைக் கடந்து, சுத்த மாயையைக் கடந்து சிதாகாசத்தில் விளங்கும் பரம்பொருள் ஒலிவடிவினன் என்பதை அறிவுறுத்தவே 'நமச்சிவாய வாழ்க’ என்று தொடங்கியுள்ளார். இந்தச் சொல்லின் ஒலி வடிவாக இறைவன் உள்ளனன் என்பதை அறிவுறுத்துகிறார். இறைவன் சொல் வடிவாக, ஒலி வடிவாக உள்ளனன் என்பது மிகப் பழங்காலந்தொட்டு சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம் உள்ளிட்ட எல்லாச் சமயங்களும் ஏற்றுக்கொண்ட கருத்தாகும். அம்பிகையை வழிபடு பவர்கள் அவளை, மூலமந்திர ரூபமான ரீலலிதா திரிசதியில் 'ஏகாrர்யை நம’ என்று வழிபடுவார்கள். இந்த நாமம் அவள் பிரணவத்தை வடிவமாகக் கொண்டவள் என்பதை நன்கு அறிவிக்கும். காளிதாச