பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 291 என்னும் அனுபவப் பிழிவு நூலைத் தோற்றுவிப்பதற்கே என்பது முன்னரே கூறப்பெற்றுள்ளது. ஆனால் அனுபவம் பிரிந்தவுடன் அடிகளார் கலங்கத் தொடங்கிவிடுகிறார். மறையோர் கோலத்திலிருந்து செல்நெறி காட்டியவர், இருங்கழல் சென்னியில் வைத்து (Ք(ԼՔ இறை அனுபவத்தைத் தந்த அவர், இப்பொழுது திடீரென்று இரண்டையும் எடுத்துக் கொண்டார் என்ற நினைவு, அவரை ஆறாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது. அந்தத் துயர் தலைதுாக்கிய பொழுதெல்லாம் வேறு யாருடைய துணையும் இல்லாமல் தாம் தனியாய் நிற்பதை உணர்ந்த அடிகளார், தளர்ந்தேன் அடியேன்” என்றும், தமியேன் அலந்தேன்’ என்றும், முதல்வா தரியேன்” என்றும் பாடுவது அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்பெருந்துறை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும். - மறையவர் கோலத்தில் துறவியாக அமர்ந்திருந்த பெருமானைக் கண்டவுடனேயே சிவன் என யானும் தேறினன்' என்று பேசுகிறார் அடிகளார். துறவுக் கோலத்தில் இருந்த ஒருவரைச் சிவன் எனத் தேறியது சரி. அக்கோலத்தில் ஈடுபட்டு அவரிடம் திருவடி தீட்சை பெற்று அவரையே பார்த்துக் கொண்டிருந்த அடிகளாருக்கு உமையின் நினைவு எவ்வாறு வந்தது? ‘மணாளா போற்றி என்றும் பஞ்சேரடியாள் பங்கா என்றும் கூற, என்ன நிகழ்ந்தது? உண்மையில், இங்கு ஒன்றும் நிகழவில்லை, குருவாக வந்த துறவிதான் எதிரே இருந்தார். அடிகளார் புறக் கண்களால் அவரைப் பார்க்கத் தொடங்கி, மெல்லமெல்ல அகக் கண்களால் அந்தக் குருவைப் பார்க்கிறார். காட்சி விரைவாக விரிந்து கொண்டே செல்கிறது. துறவியிருந்த இடத்தில் தென்முகக் கடவுள் வடிவத்தில் இறைவன் காட்சி நல்குகிறான். ஒரு விநாடியில் அந்தத் தட்சணாமூர்த்தி வடிவம் மறைகின்றது. அடுத்து, உமையொருபாகன் அந்த இடத்தில் காட்சி