பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருவாசகம் - சில சிந்தனைகள் அளிக்கிறான். துறவி இருந்த இடத்தில் உமை மணாளன் தோன்றுகிறான். திருக்கல்யாணக் கோலத்தில் உமையோடு சேர்ந்து காட்சி அளித்த இறைவன், தனியாக அமர்ந்திருந்த இறைவியைத் தன்னுள் ஒருபாதி ஆக்கிக் கொள்ளுகிறான். இந்தக் காட்சிகள் விரிந்ததைத்தான் ‘மணாளா என்றும், அடியாள் பங்கா என்றும் அடிகளார். பேசுகின்றார். கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலை நாடு உடைய மன்னே போற்றி கலைஆர் அரிகேசரியாய் போற்றி (187-190) கவைத்தலை, குவைப்பதி என்ற இரண்டும் வடநாட்டிலுள்ள சிவதலங்கள். இன்று அவற்றின் பெயர் அறியப்படவில்லை என்று கூறுகின்றனர். இவைபற்றி மேற்கொண்டு ஒன்றும் கூறமுடியவில்லை. அடுத்துள்ள 'மலை நாடுடைய மன்னே என்பது பாண்டி நாட்டிற்கும், சேர நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதியைக் குறிப்ப தாகும். இப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை நீண்டுகிடக்கிறது. இங்குள்ள சிவதலங்கள்பற்றி ஒன்றும் அறியப்படாமையால் இத்தொடருக்கு இமயமலை என்று பொருள்கூறுவாரும் உளர். இமயப் பகுதியை மலைநாடு என்று குறிப்பிடும் மரபு இல்லை. அடுத்துள்ளது கலை ஆர் அரிகேசரியாய் என்பதாகும். இதனையும் தலம் எனப் பலர் கூறிக்கொண்டனர். இது பொருத்தமுடையது என்று நினைப்பதற்கில்லை. அரிகேசரி, பரகேசரி என்ற சொற்கள் பாண்டிய மன்னர்களுக்குமட்டும் உரிய பட்டங்களாகும். தந்தை அரிகேசரி என வைத்துக் கொண்டால் மகன் பரகேசரி என்றும், அவன் மகன் திரும்பவும் அரிகேசரி என்றும் பட்டப்பெயர் வைத்துக் கொள்ளுதல் மரபு. இரண்டாம் வரகுணனின் அமைச்சராக இருந்த திருவாதவூரர் பாண்டி நாட்டைப்