பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 293 பழம்பதியாக உடைய சிவபெருமானுக்கு இச் சிறப்புப் பெயரை ஏற்றி அரிகேசரியாய் என்று அழைப்பதில் வியப்பில்லை. கலை.ஆர்’ என்ற சொல்லுக்கு அழகிய பிறைச்சந்திரனைச் சூடிய என்று பொருள் கொள்ளலாம். மேலும், இறைவனே அங்கயற்கண்ணியை மணந்து பாண்டியர்க்கு மருகனாக இருந்த கதையையொட்டி 'அரிகேசரியாய்’ என்று கூறினார் என்றலும் ஒன்று. திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருப்புஅமர் பூவணத்து அரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துளியமும் இறந்த சுடரே போற்றி தெரிவு அரிதுஆகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆள்ஆனவர்கட்கு அன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி (191–199) ஒரே பொருள் அருவமாகவும் உருவமாகவும் இருத்தல் கடினம். ஆனால், இறைவனைப் பொறுத்தமட்டில் எல்லாப் பருப்பொருள்களிலும் அவற்றின் வடிவமாகவும், உயிராகவும், நுண்பொருள்களில் அவற்றின் உயிர்க்கு உயிராகவும் உள்ளான் ஆதலின் அருவமும் உருவமும் ஆனாய்’ என்றார். மனிதர்களைப் பொறுத்தமட்டில் இன்றைய விஞ்ஞானம் மூன்று நிலைகளை ஏற்றுக்கொள்கிறது. இவை யாக்கிரதம்(விழிப்பு நிலை, சொப்பனம்(கனவு நிலை), சுழுத்தி(ஆழ் துயில் நிலை என்பவையாம். இவைபோக தத்துவ ஞானிகள் மேலும் இரண்டு நிலைகளைக் கூறுவர். அவை துரியம், துரியாதீதம் என்பவையாகும். இவற்றுள் துரியநிலை என்பது சிலநேரம் சமாதியிலும் பலநேரம் விழிப்பு நிலையிலும் இருப்பதாகும், இறுதியாகவுள்ள துரியாதீதம் முழுச் சமாதிநிலை ஆகும்.